ரவிமோகன் ஆர்த்தி ரவி இடையேயான கருத்து வேறுபாட்டின் குரல் கோர்ட்டில் ஒலித்ததுடன், இன்ஸ்டாவிலும் சமீபகாலமாக அறிக்கை வாயிலாக ஒலித்து வந்தது. இது என்னடா ரவிமோகன் ஆர்த்தி தம்பதிக்கு வந்த சோதனை என நெட்டிசன்களையே புலம்ப வைத்தது இருவரது அறிக்கை. இந்த வகையில் முதலில் அறிக்கை சண்டையை ஆரம்பித்த பெருமை ஆர்த்தி ரவியையே சேரும்.
அவர் முதலில், "இப்பொழுது எங்கள் பிரிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என பதிவு செய்திருந்தார். எங்கள் பிரிவுக்கு மூன்றாம் நபரான பாடகி கெனிஷா வந்ததே காரணம். மேலும் ரவி மோகன் அவராகவே முடிவெடுத்து தான் இந்த வீட்டில் இருந்து வெளியேறினார். போகும்பொழுது அவர் சம்பாதித்த கார் வரைக்கும் எடுத்து கொண்டு தான் சென்றார்" என குற்றம் சாட்டினார்.

அவரை தொடர்ந்து, ரவிமோகன், " என் வாழக்கையில் நான் சந்தோஷங்களை இழக்க காரணமே, ஆர்த்தி ரவியும், அவரது அம்மாவும் தான்" என கூறினார். இதனை பார்த்து கடுப்பான ஆர்த்தி ரவியின் அம்மா சுஜாதா அறிக்கை வாயிலாக ரவிமோகனை சரமாரி கேள்வி கேட்டார். அதில் "கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுக்கு ரவிமோகனை நான் பொறுப்பேற்க வைத்தேன் என சொல்லுகிறாரே அவரை வைத்து தயாரித்த படங்களுக்கான ரூ.100 கோடி கடனுக்கான வட்டியை நான் மட்டும் தான் செலுத்தி வருகிறேன்.
ரவி மோகன் சொல்லும் அடுக்கடுக்கான பொய்கள் அனைத்தும் அவரை தரம் தாழ்த்தி விடுகிறது. அவரை வைத்து நான் படம் எடுக்க ஒருநாளும் நினைக்கவில்லை அவரது ஆலோசனையின் பேரிலேயேதான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்பட்டேன். அவரை நான் கடனாளியாக்கினேன் என்றாலும், ஒரே ஒரு ரூபாய் கடனுக்கு அவரை பொறுப்பேற்க வைத்திருந்தாலும், அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் ரவி பார்ப்போம்.
இதையும் படிங்க: இனி 2 பேரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

வார்த்தைக்கு வார்த்தை அம்மா, அம்மா என்றழைக்கும் ரவி மோகனை இந்த சூழலிலும் நான் மகனாகவே நினைக்கிறேன். என் மகளும், ரவி மோகனும் இணைந்து வாழ வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். இப்படி அக்கறை காட்டும் என்னை வைத்து சித்திரவதை செய்த மாமியார் என்ற புதிய பட்டத்தை கொடுத்து அந்த வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள்" என அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

இதனை பார்த்து அனைவரும் கெனிஷாவுக்கு எதிராக திரும்ப அவரும் அறிக்கை வாயிலாக, எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையில் ஒரு அமைதி நிலவுகிறது, என் ஆன்மாவுக்குள் தனிமையும் ஒரு அமைதியான போராட்டமும் நடக்கிறது. என் மீது நீங்கள் குச்சிகளும் கற்களும் வீசினாலும் அது என்னை காயப்படுத்தாது. நான் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவேன். நான் இசையைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன், தழும்புகளை ஞானமாக மாற்றுகிறேன்.நாளைய விடியல்கள் மற்றும் புதிய தொடக்கங்களுக்கு ஆழமான துயரங்களிலிருந்து, என் ஆன்மா பாடுகிறது" என தெரிவித்தார்.

இந்த சூழலில், ஆர்த்தி ரவி, நடிகர் ரவிமோகனிடம் ஜீவனாம்சமாக ரூ.40 லட்சம் மாதம் கொடுக்க வேண்டும் என்ற வாதத்தை நீதிமன்றத்தில் முன் வைத்தார். இதனை குறித்து விளக்கம் அளிக்க ரவிமோகன் தரப்புக்கு அவகாசம் கொடுத்து உத்தரவிடபட்டது. மேலும், இனி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இருவரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என எச்சரித்துள்ளது. இந்த சூழலில் இணையதளங்களில் தொடர்ந்து தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருபவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் பாடகி கெனிஷா.

அவர் வெளியிட்டுள்ள அதிகார பூர்வ அறிக்கையில், "எங்கள் வாடிக்கையாளரின் அறிவுறுத்தலின் பேரில், பன்மொழி பாடகியும், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பொது ஈடுபாடு ஆகிய துறைகளில் நிகரற்ற நற்பெயரைக் கொண்ட சுயாதீன நிபுணருமான திருமதி கெனீஷா பிரான்சிஸ், இந்திய சட்டத்தின் கீழ் கடுமையான, கைது செய்யக்கூடிய குற்றங்களாகக் கருதப்படும் செயல்களின் முறையான சட்ட அறிவிப்பில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் நிறுவனங்களையும் சேர்க்கவும், அதற்கான நடவடிக்கையாகத் தொடங்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவும் இந்த சட்ட அறிவிப்பை வெளியிடுகிறோம்.

தற்போதைய பிரச்சினை, சமீபத்தில் பரவலான ஊடக யூகங்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகளின் விளைவாகும் - குறிப்பாக ஒரு பிரபலமான நடிகரின் திருமணப் பிரிவைச் சுற்றியுள்ள பொது விவாதத்திலிருந்து எழுகிறது. இந்த சூழலில், எங்கள் வாடிக்கையாளர் பொது ஊகங்கள், டிஜிட்டல் விரோதம் மற்றும் நற்பெயர் தாக்குதல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மற்றும் தீவிரமடைந்து வரும் வடிவத்தின் தேவையற்ற மையப் புள்ளியாக மாறியுள்ளார்.
இந்த ஜோடிக்கப்பட்ட சங்கம், அவதூறு வெளியீடுகள், பெயர் மற்றும் படத்தை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துதல், கையாளப்பட்ட அல்லது பாலியல் ரீதியாகத் தூண்டும் படங்களின் புழக்கம் மற்றும் தவறான, புண்படுத்தும் மற்றும் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளை மீண்டும் வெளியிடுதல் மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் அவதூறு பிரச்சாரத்தை திட்டமிட்டு விரிவுபடுத்தியுள்ளது.

வெளிப்படையான மற்றும் ஆபாசமான செய்திகள், மற்றும் மீண்டும் மீண்டும் ஆன்லைன் பின்தொடர்தல் மற்றும் டேக்கிங் செயல்கள். இவை அனைத்தும் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டுவதற்கும், உளவியல் ரீதியான காயத்தை ஏற்படுத்துவதற்கும், வேண்டுமென்றே நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதற்கும் கணக்கிடப்படுகின்றன. இந்தச் செயல்கள் LEO வரவேற்பு முன்னேற்றங்கள் அல்லது பாலியல் வண்ணக் கருத்துகள்), பிரிவு 351 (குற்றவியல் மிரட்டல்) பாரதிய நியாய சன்ஹிதா, 2023, பிரிவு 75 (Cand மூலம் பாலியல் துன்புறுத்தல் பிரிவு 356 (அவதூறு), அத்துடன் தகவல்களின் பல விதிகள் ஆகியவற்றின் நேரடி மீறல்களுக்குச் சமம்.

தொழில்நுட்பச் சட்டம், 2000, பிரிவு 66E (தனியுரிமை மீறல்), பிரிவு 67 மற்றும் LEG பிரிவு 67 A (மின்னணு வடிவத்தில் ஆபாச உள்ளடக்கத்தை வெளியிடுதல் அல்லது பரப்புதல்) GAL எங்கள் வாடிக்கையாளர் சுயாதீனமாக சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் ஹாஷிங் மற்றும் நேர முத்திரை நெறிமுறைகள் மூலம் URLகள், பயனர்பெயர்கள், நேர முத்திரைகள், ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் மெட்டாடேட்டா உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய பொருட்களையும் பாதுகாத்துள்ளார், மேலும் அத்தகைய ஆதாரங்கள் நீதித்துறை, ஒழுங்குமுறை மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் நம்பியிருக்கும்." என உள்ளது. இதிலிருந்து இனி தன்னை பற்றி பேசினாலோ இணையத்தில் தேவையில்லாமல் பதிவு செய்தாலோ சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் கெனிஷா.
இதையும் படிங்க: ஒன்னு என் கூட வாழு இல்ல பணம் கொடு..! ரவி மோகனுக்கு ஆர்த்தி ரவி வைத்த செக்!!