நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பம் நல நீதிமன்றத்தில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சமரச தீர்வு மையத்திற்கு இந்த வழக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படாததால், இந்த வழக்கு மீண்டும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 2 குழந்தை பெத்துகிட்ட அப்ப தெரியலயா ஆர்த்தி பத்தி.. ரவி மோகனை கிழி கிழினு கிழிச்ச பயில்வான் ரங்கநாதன்..!

இதனிடையே ரவிமோகனுக்கும், ஆர்த்திக்கும் இடையே அறிக்கை போர் நடைபெற்று வந்தது. இருவரும் மாறி மாறி குறை கொண்டே இருக்க, ரவி மோகனுக்கு ஆதரவாக பாடகி கெனிஷாவும், ஆர்த்திக்கு ஆதரவாக அவரது தாயார் சுஜாதாவும் குரல் கொடுத்தனர். ஆனாலும் இந்த விவகாரத்தில் யார் மீது தவறு உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரியவில்லை.

இந்நிலையில் விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் தனித்தனியாக கார்களில் வந்து நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆர்த்தி தனது தந்தையுடன் கோர்ட்டில் ஆஜராகினார். அப்போது தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்பதற்காக விளக்கத்துடன் நடிகர் ரவிமோகன் மனு தாக்கல் செய்தார். அதேபோல ஆர்த்தி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனக்கும், தனது இரு மகன்களுக்கும் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவிற்கு பதிலளிக்கும்படி ரவி மோகனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: பாத்ரூம் போற வேகத்தில் ஆர்த்தி ரவியை திட்டிய சுசித்ரா..!