மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.

இலங்கையில் இருந்து தமிழகத்தை தேடி வரும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் சிறந்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளது. இந்த படத்தை பார்த்து விட்டு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் முரளி என்ற கேரக்டரில் வரும் கமகேஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த ஸ்டாப் ஜப்பான்.. கடல் கடந்து வெளிநாட்டில் ரிலீஸ் ஆகிறது 'டூரிஸ்ட் ஃபேமிலி'..!

24 வயதே ஆன இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது முழு திறமையையும் இப்படத்தில் காண்பித்துள்ளார் என்றே சொல்லலாம். இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அவருக்கு இலங்கை தமிழ் மக்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெறிவித்து வருகின்றனர். படம் வந்ததிலிருந்து பலரது பாராட்டுகளை மட்டுமே பெற்று வரும் நிலையில் படத்தை குறித்து பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படத்தை குறித்து சமுத்திர கனி, அமைச்சர் மா.சுப்பிரமணி என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி இருக்க, டூரிஸ்ட் ஃபேமிலி படம் எப்பொழுது ஓடிடியில் வெளியாகும் என அனைவரும் காத்து கொண்டிருக்கும் இந்த வேளையில், இப்படத்தை ஜப்பானில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஜப்பானில் தமிழ் திரைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருப்பதால் வரும் 24- ம் தேதி அங்கு டூரிஸ்ட் ஃபேமிலி வெளியாகிறது. இந்த படம் ஜப்பானிலும் வெற்றியடையும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில், படத்தை பார்த்த பிரபல இயக்குனரான ராஜமௌலி , டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து தனது பாராட்டுகளை தெரிவித்து தனது எக்ஸ் தளவாயிலாக தெரிவித்து உள்ளார். அதன்படி, " டூரிஸ்ட் பேமிலி ஒரு அற்புதமான படம். ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் பார்க்க வைத்தது. இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் அற்புதமாக இந்த படத்தின் கதையை எழுதி இயக்கி இருக்கிறார். இது போன்ற சிறந்த படத்தை காண மக்களாகிய நீங்கள் தவறவிடாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகிறார்.
இதையும் படிங்க: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்து ரஜினி சொன்ன அந்த வார்த்தை..! மெய் மறந்து நின்ற சசிகுமார்..!