"குத்துவது நண்பனாக இருந்தாலும் செத்தாலும் வெளியே சொல்ல கூடாது" என்ற வசனத்தை கேட்டால் அனைவரது நினைவிற்கு வருபவர் நடிகர் சசிகுமார். அனைத்து இளசுகளின் ஆழ் மனதிலும் காதலர்களுக்கு கஷ்டம் என்றால் உதவி செய்ய வேண்டும் என்ற அழகான எண்ணத்தை மனதில் விதைத்த படம் தான் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான "நாடோடிகள்". இந்த படத்தின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் இவரது புகழ் பரவ ஆரம்பித்தது. இதனை அடுத்து இவர் 2008ம் ஆண்டு "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்" என்ற பாடலால் ஃபேமஸ் ஆன "சுப்ரமணியபுரம்" என்ற படத்தில் நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடித்து இருப்பார். இந்த படமும் இன்றளவும் ரசிகர்களால் பாராட்டை பெற்ற படம் தான்.

இதனை அடுத்து பல போராட்டங்களின் மத்தியில் இதுவரை, ஈசன், போராளி, கோ, மெரினா ஆகிய படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தாலும் அதற்கு பின்பாக வந்த சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, பலே வெள்ளையத் தேவா, கிடாரி, வெற்றிவேல், கொடிவீரன், அசுரவதம், அடுத்த சாட்டை, எனை நோக்கி பாயும் தோட்டா, கென்னடி கிளப், பேட்ட, நாடோடிகள் 2, உடன்பிறப்பே, முந்தானை முடிச்சு, எம் ஜி ஆர் மகன், ராஜ வம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, காரி, நான் மிருகமாய் மாற, அயோத்தி, நா நா, நந்தன், கருடன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: படம் நல்லா இருந்தா மக்கள் பாக்க வராங்கய்யா.. வருங்கால இயக்குநர்களுக்கு நடிகர் சசிகுமார் கொடுத்த டிப்ஸ்..!

இப்படி இருக்க, தற்பொழுது நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி, இலங்கையில் இருந்து தமிழகத்தை தேடி வரும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் சிறந்த படமாக இருப்பது தான் டூரிஸ்ட் ஃபேமிலி படம். இந்த படத்தை 24 வயதே ஆன இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது முழு திறமையையும் இப்படத்தில் காண்பித்துள்ளார்.

இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அவருக்கு இலங்கை தமிழ் மக்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெறிவித்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து தமிழ் மக்களும் பார்த்து விட்டு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் முரளி என்ற கேரக்டரில் வரும் கமகேஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதாக தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார் சசிகுமார். அதன்படி அந்த பதிவில், " 'படம் சூப்பர்' என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்திற்குச் சொல்லவா வேண்டும். 'அயோத்தி', 'நந்தன்' படம் பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி' படம் பார்த்து, "சூப்ப்ப்பர் சசிகுமார்..." என அழுத்திச் சொன்னார். "தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க.. சொல்ல வார்த்தையே இல்ல, அந்தளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க.

சமீப காலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்..." என ரஜினி சார் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படக் குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி..." என பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: சண்டைய ஆரம்பிச்சுட்டீங்க... ஆனா மக்கள மறந்துட்டீங்க... நடிகை சிம்ரன் பேச்சு..!