விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷா குப்தா.

கோவையை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், பின்னர் மாடலிங் செய்ய துங்கினார். இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்', என்கிற சீரியலி அறிமுகமானார்.
இதையும் படிங்க: உலகளவில் வசூலில் சாதனை படைத்த 'பறந்து போ' திரைப்படம்..! இயக்குநர் ராம் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி..!

இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, விஜய் டிவியில் 'அவளும் நானும்' என்கிற தொடரில் நடிக்கும் வாய்ப்பு தர்ஷா குப்தாவுக்கு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே, போன்ற தொடர்களில் நடித்த தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.

என்னதான் இவர் கஷ்டப்பட்டு சமைத்தாலும், இவருடைய சமையல் நிகழ்ச்சிக்கு எடுபடாமல் போனது. எனவே மிக விரைவாகவே எலிமினேட் ஆனார்.

அடுத்தடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் அதிகம் பேசப்பட்ட பிரபலமாக மாறினார். இதன் காரணமாக மோகன் ஜி இயக்கத்தில் வெளியான 'ருத்ர தாண்டவம்' என்கிற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தர்ஷா குப்தாவுக்கு கிடைத்தது.

இதன் பின்னர் 'ஓ மை கோஸ்ட்' என்கிற திரைப்படத்திலும் நடித்தார். அழகும் திறமையும் இருந்தும், ஏனோ வாய்ப்புகள் இவருக்கு அடுத்தடுத்து கிடைக்காமல் போனது.
இதையும் படிங்க: இலங்கைக்கு ஜோடியாக பறந்த ரவி மோகன் – கெனிஷா..! முக்கிய புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி..!