ஒரு காலத்தில் சினிமா உலகையே தனது உள்ளங்கையில் வைத்து அசத்தியவர் என்றால் அவர் தான் நடிகை குஷ்பூ, ஆனால் காலங்கள் மாறிப்போனதால் இனி வரும் இளசுகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தனது திரை உலக பயணத்தை முடித்துக் கொண்டார். இனி குஷ்பூ படங்களில் நடிக்கவில்லையா என அனைவரும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் ரசிகர்களின் மனக்குமுறலை மாற்றி அமைக்க வந்தவர் தான் குட்டி குஷ்பூவான நடிகை சமந்தா. இவர் பார்க்க அழகு முகத்தோற்றத்தில் இருந்தாலும் தனது சிரிப்பால் அனைவரையும் வருடி இழுத்தவர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஜெனிலியாவை போல இவரது நடக்கையிலும் பேசுகையிலும் ஒரு விதமான குழந்தை தன்மை வெளிப்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இப்படிப்பட்ட சமந்தா தனது திரையுலக பயணத்தில் பல வெற்றிகளை கண்டு வந்தாலும் வாழ்க்கை என்ற பயணத்தில் சில சருக்கல்களை சந்தித்து இருக்கிறார். எப்படிப்பட்ட பிரபலங்களாகவே இருந்தாலும் அவர்களுக்கும் வாழ்க்கை என்பது சாதாரணமான ஒரு காரியம் தான் என்பது இவரது வாழ்க்கைக்கு பொருந்தும். ஏனெனில் மிகப்பெரிய ஸ்டார் நடிகரான நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. ஒரு மிகப்பெரிய ஸ்டார் குடும்பத்தில் சமந்தா வாக்கப்பட்டிருக்கிறார் என்பதை கண்டு ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க, அடுத்த சில வருடங்களிலேயே இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டு வெளியேறிய காட்சிகள் ரசிகர்களின் மனதை மிகவும் புண்படுத்தியது. ஆனாலும் இன்று வரை இவர்களது பிரிவுக்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. தனது அன்பு காதலனை பிரிந்த சோகத்தில் இருந்த நடிகை சமந்தா சில வருடங்களாக திரையுலகில் தனது முகத்தை காண்பிக்காமல் அமைதியாக இருந்தார். அப்பொழுது திடீரென ஒரு நாள் புஷ்பா திரைப்படத்தில் "ஓ சொல்றியா மாமா" பாடலுக்கு நடனமாடி அனைவரையும் திக்கு முக்காட வைத்தார். சில நாட்கள் ஈஷா யோகா மையம் வெளியுலக பயணம் என தனிமையை இனிமையாக்கி வந்த நடிகை சமந்தா திடீரென்று ஒரு நாள் தனது முன்னாள் கணவரான நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை திருமணம் செய்த தகவலை கேட்டு ஒரு பக்கம் மனம் உடைந்தாலும் மறுபக்கம் ஆத்திரம் கொண்டார்.

இதனை அடுத்து தனது முன்னாள் கணவரான நாக சைதன்யாவே தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு அடுத்தடுத்த பயணத்தை மயில் கல்லாக வைத்து சென்று கொண்டிருக்கும் பொழுது நான் மட்டும் ஏன்? சும்மா அமர்ந்திருக்க வேண்டும் என யோசித்த சமந்தா, அடுத்ததாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை அதிரடியாக ஓபன் செய்து மக்களிடம் நான் மீண்டும் நடிக்கப் போகிறேன் என சொல்லி மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் இவர் செல்லும் அனைத்து மேடை நிகழ்ச்சிகளிலும் ரசிகர்கள் இவர் மீது வைத்திருக்கும் அன்பை பார்த்து கண்ணீர் விட்டு கதறி வருகிறார் நடிகை சமந்தா. இப்படி இருக்க தான் அவ்வப்பொழுது தன் உடல் நிலையை எப்படி பாதுகாத்துக் கொள்கிறேன்.. அதற்கு எப்படி யோகாசனம் செய்கிறேன்.. மேலும் உடற்பயிற்சி என்பது எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் மக்களுக்கு தெரிவித்து வரும் நடிகை சமந்தாவை ஹேட்டர்ஸ்களும் விட்டபாடில்லை. அந்த வகையில் தற்பொழுது அவருக்கு நடந்த ஒரு சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: என் முதல் காதலனுக்காக என் உடலில் இதை செய்தேன்..! நடிகை சமந்தா ஓபன் டாக்..!
அதன்படி தற்போது தொடர் சிகிச்சையில் இருப்பதால் நடிகர் சமந்தாவின் உடல் எடை மிகவும் குறைந்து ஒல்லியாக காணப்படுகிறார். இதனை அடுத்து அவரை instagram மூலமாக பார்க்கும் நெட்டிசன்கள் அனைவரும் அவரை கொஞ்சம் உடல் எடையை அதிகரிங்க சமந்தா என ட்ரோல் செய்து வருகின்றனர். இப்பதி இருக்க மயோசிடிஸ் எனும் Rare autoimmune நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, சிகிச்சைகளுக்குப் பிறகு மீண்டும் திரைப்பட உலகில் முழுமையாக ஈடுபடத் தயாராகி வருகிறார். அதன் முதல் கட்டமாக, சமீபத்தில் அவர் தயாரித்த படம் 'சுபம்', ஒரு சினிமா தயாரிப்பாளராக அவரது புதிய பயணத்தைத் தொடங்கிய சிறப்பான முயற்சியாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சூழலில் ‘சுபம்’ பட ப்ரோமோஷன் நிகழ்வுகள் மற்றும் சமீபத்திய புகைப்படங்களில் சமந்தா, மிகவும் வித்தியாசமான உடல்தகுதி மற்றும் 'ஸ்லிம் லுக்' உடன் வெளியே வந்தார். இதனால் வலைதளங்களில் ரசிகர்கள், “அவர் என்ன டயட் பண்ணுறாங்க? மற்றும் "உங்க ஃபிட்னெஸ்ஸுக்கு ரகசியம் என்ன?" என்றெல்லாம் கேள்வி மழை பொழிகின்றனர். இதனால், தற்போதைய உடல் பராமரிப்பு மற்றும் உணவுக் கட்டுப்பாடு பற்றி அவர் தெரிவித்துள்ளார். அதன்படி,
"பிடித்ததை சாப்பிடுங்க… சாப்பாடு என்பது சந்தோஷமாக இருக்க வேண்டும்" என கூலாகப் பதிலளித்து இருக்கிறார். இப்படி இருக்க சமந்தா தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, சிவப்பு இறைச்சி உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்த்துள்ளார்.

அதற்குப் பதிலாக, பசுமை காய்கறி உணவுகள், நார்ச்சத்து மிகுந்த பழங்கள், வெண்ணெய் மற்றும் பாலின்றி சமைக்கப்படும் உணவுகள் ஆகியவற்றையே உணவாக எடுத்துக் கொள்கிறார். தினசரி யோகா, மெதிடேஷன், ஓரளவு உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமும் உடலைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என அவரை சுற்றி இருக்கும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தனது உடல் நிலையை சமாளித்து திரும்பியதற்கும், நடிப்பை மீண்டும் தொடங்க தயாராகும் தைரியத்திற்கும், சமந்தாவிற்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என் முதல் காதலனுக்காக என் உடலில் இதை செய்தேன்..! நடிகை சமந்தா ஓபன் டாக்..!