"அவள் வருவாளா" என்ற அஜித்தின் திரைபடத்தில் இடம்பெற்ற 'ருக்கு ருக்கு' பாடலில் ஆடி ஒரு சில ரசிகர்களை கவர்ந்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆரம்ப காலத்தில் விஜய் சேதுபதி, விமல் மற்றும் யோகிபாபு போல் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கியவர். குரூப் டேன்ஸிலும் தனது தனித்துவத்தை காண்பித்த இவரது திறமையை கண்டுபிடித்த இயக்குநர் நெல்சன், கிங்ஸ்லியை அனைவரும் பார்க்கும் படி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

இதனை தொடர்ந்து, நயன்தாரா, ஜாக்லின், யோகிபாபு என பல நடிகர்கள் நடித்த "கோலமாவு கோகிலா" படத்தில் கேங்ஸ்டருடன் இணைந்து காமெடி நடிகராக அறிமுகமான ரெடின், தொடர்ந்து எல்கேஜி, கூர்கா போன்ற படங்களில் நடித்திருந்தார். இத்தனை படங்கள் இவர் நடித்திருந்தாலும் நெல்சன் இயக்கிய "டாக்டர்" திரைபடத்தில் தனது அபார காமெடி திறமையை வெளிப்படுத்தி புகழின் உச்சிக்கே சென்றார்.
இதையும் படிங்க: பிரம்மாண்டமாக நடந்த சங்கீதா - கிங்ஸ்லி வளைகாப்பு..! வாழ்த்திய சினிமா நட்சத்திரங்கள்..!

இவரை போலவே பிரபல சீரியல் நடிகையான சங்கிதா, தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம் போன்ற சீரியல்களில் வில்லியாக நடித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும், சந்தானம் நடித்த 'பாரீஸ் ஜெயராஜ், வீட்ல விஷேசம்' போன்ற படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், 46 வயது வரை தனது வாழ்க்கையில் திருமணமே செய்துகொள்ளாமல் இருந்த ரெடின் கிங்ஸ்லி, சங்கிதாவின் மீது காதல் வயப்பட, கடந்த 2023ம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்தனர். அதற்கு பின் இருவரின் காதல் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்தது. இப்படி இருக்க, சமீபத்தில் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கிதா, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்தின் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார். இதனை பார்த்த பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில், ஏற்கனவே சங்கீதாவுக்கு வளைகாப்பு என்று அழைக்கப்படும் பூச்சூடல் விழா எளிமையாக நடந்து முடிந்த நிலையில், தனது மனைவிக்கு பிரமாண்டமாக வளைகாப்பை நடத்த திட்டமிட்ட கிங்ஸ்லி சமீபத்தில் அதனை செயல்படுத்தி காண்பித்து சங்கிதாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வரவைத்தார். இதனை பார்த்த பல பெண்கள் கணவர் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என அவர்களும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இந்த நிலையில், எப்பொழுது குழந்தை பிறக்கும் என காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஆச்சர்யம் ஊட்டும் வகையில் கிங்ஸ்லியின் மகள் தேவதையாக இன்று உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி, தனது ஆசை மகளை கையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் அழகிய போட்டோகளும் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் குட்டி கிங்ஸ்லிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்ப்பமாக இருக்கும் ரெடின் கிங்ஸ்லி மனைவி..! ரசிகர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சங்கீதா..!