தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்து வடிவேலுவையே பின்னுக்கு தள்ளியவர் தான் சந்தானம். இனி ஹீரோக்களுடன் இணைந்து எந்தவித காமெடி கதாபாத்திரங்களிலும் நடிக்க போவதில்லை என்று முடிவு செய்த இவர், தற்பொழுது காமெடி ஹீரோவாக மாறி பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது ஆரம்ப வாழக்கை லொள்ளு சபாவில் தொடங்கியது. இதனை அடுத்து அவரது நகைச்சுவை திறமைக்கு பலனாக எஸ்.டி.ஆரின் "காதல் அழிவதில்லை" என்ற படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். ஆனால் அப்படம் பெரிதும் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை என்றாலும், 2004 ஆம் ஆண்டு சிம்புவின் 'மன்மதன்' திரைப்படத்தில் நடித்து தனது காமெடி கதாபாத்திரத்திற்கு என தனி இடத்தை உருவாக்கினார். அதற்கு பின் பல படங்களில் காமெடியனாக நடித்து இன்று சம்பளத்திலும் ரசிகர்களிலும் லட்சங்களை தாண்டி கோடிகளில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்களை கூறிவந்த நிலையில், சமீபத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் மே 16ம் தேதியான நாளை அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தை காண மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சந்தானத்தை மன்னிச்சிடுங்க பவன் கல்யாண்.. ப்ளீஸ்..! நண்பனுக்காக பேசிய கூல் சுரேஷ்..!

சமீபத்திய நேர்காணலில் பேசிய நடிகர் சந்தானம், எனக்கு உதயநிதி ஸ்டாலினும் நண்பர்தான் அவர் கூப்பிட்டால், ஒரு சில காரியங்கள் எனக்கு செட் ஆனால் கண்டிப்பாக அவருக்காக இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் உதாரணத்திற்கு தற்பொழுது சிம்புவுடன் நடிக்கும் எனக்கு அவர் எந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறாரோ எனது மரியாதை குறையாத வண்ணம் வைத்துள்ளாரோ அதே போல் உதயநிதியும் செய்தால் அவருக்கு துணையாக நிற்பதில் தவறில்லை என தெரிவித்தார். அவர் தெரிவித்த மறுகனமே அவருடைய படத்தின் மீது பாஜகவினர் வழக்கு தொடர்ந்தனர். இதனை அடுத்து தற்பொழுது திருப்பதி பெருமாள் குறித்த பாடலை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர் படக்குழுவினர்.

இந்த சூழலில், பொல்லாதவன் திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தால் தான் இன்று பல்சர் பைக் பல இளசுகளின் கனவு வாகனமாக உள்ளது. இந்த படத்தில் தான் நடித்ததை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகர் சந்தானம். அவர் பேசுகையில், " பொல்லாதவன் திரைப்படத்தில் நடிக்க முதலில் என்னை வேண்டாம் என்றார் இயக்குநர் வெற்றிமாறன். பின் தயாரிப்பாளர் என்மீது கொண்ட நம்பிக்கையால் கொடுத்த நெருக்கடியில்தான் என்னை படத்தில் சேர்த்தார் இயக்குனர். எனக்கு அந்த திரைப்படத்தில் கதாப்பாத்திரம் என்பது துளிகூட கிடையாது. அதில் நான் தனுஷ் நண்பனாக அல்ல வெறும் கருணாஸின் நண்பராகவே நடித்து இருப்பேன்.

அவருடன் ஒன்லைன் பஞ்ச் வசனங்களை பேசினேன். ஆனால் அது ஹிட் ஆகும் என எதிர்பார்க்கவில்லை. அதேப்போல் தான் இயக்குநர் ராஜமவுலி சார், "நான் ஈ" படத்தில் வசனமே இல்லாமல் ஒரு கதாப்பாத்திரத்தை எனக்கு நடிக்க கொடுத்தார். ஆனால் நான் டப்பிங்கில் சில வசனங்களை பேசினேன். அதை பார்த்து வியந்து அவரும் என்னை பாராட்டினார்" என கூறினார்.
இதையும் படிங்க: கணவரை கலாய்த்த நடிகர்.. கடுப்பான தேவயானி.. உண்மையை சொல்லி சரண்டரான சந்தானம்..!