உலகம் முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, டிரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ரஜினியின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்தப் படத்தில் தெலுங்கு திரை உலகத்தின் பிரபல நடிகர் நாகார்ஜூனா, தமிழ்-இந்தி நடிகை ஸ்ருதி ஹாசன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படி இருக்க படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'கூலி' படம், முன்பதிவிலேயே வரலாறு காணாத அளவிலான வசூலைப் பதிவு செய்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்கவும், அதைவிட முக்கியமாக வெளிநாடுகளிலும், குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழும் சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் 'கூலி' திரைப்படத்திற்கு முன்பதிவு வாயிலாகவே கோடிக்கணக்கில் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. இந்த சூழலில், சிங்கப்பூரில் இயங்கும் Farmers Constructions PTE LTD என்ற ஒரு நிறுவனம், தனது அனைத்து பணியாளர்களுக்கும் ‘கூலி’ திரைப்படம் பார்க்க சிறப்பான சலுகை ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது. அதன்படி 'கூலி' படம் ரிலீஸாகும் ஆகஸ்ட் 14-ம் தேதி அந்த நிறுவனம் முழு விடுமுறையாக அறிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி, அனைத்து ஊழியர்களுக்கும் திரைப்பட டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளன. மேலும், உணவு செலவுக்காக தனித்தனியாக 30 சிங்கப்பூர் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,850 பணமாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட் விலை சுமார் 25 சிங்கப்பூர் டாலர்கள் எனக் கணக்கிட்டால், ஒவ்வொரு பணியாளருக்கும் மொத்தமாக 55 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது பணியாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் திரு. சந்தீப் மேனன் கூறும்போது, " நாங்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பெரிய ரசிகர்கள். அவர் ஒரு நடிகருக்கு மேல். அவர் ஒவ்வொரு பட்டாசு போல சர்ச்சையின்றி மக்களை திருப்திப்படுத்தும் கலைஞர் மட்டுமல்ல.. ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, வளர்ச்சி என இவையெல்லாம் எப்படி ஒருவரின் வாழ்க்கையில் இயல்பாகவே கலந்து வரலாம் என்பதை அவர் வாழ்ந்து காட்டுகிறார். எங்கள் நிறுவன ஊழியர்களும் பெரும்பாலானோர் தமிழர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும், ரஜினியை ரசிகராக கொண்டவர்களாக உள்ளனர். அதனால், இந்த படம் ரிலீஸாகும் நாளில் அவர்களுக்கு நாங்கள் மகிழ்ச்சியை தர வேண்டும் என்று நினைத்தோம். வேலை இல்லாமல் விடுமுறை, படம் பார்க்க டிக்கெட், மேலும் உணவுக்காக பணம் என ஒரு கொண்டாட்டமாக அமைத்துள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கூலி'யில் ஹீரோவே நான் தான்..ரஜினி இல்ல..! நாகார்ஜூனாவின் பேச்சால் குழப்பத்தில் ரசிகர்கள்..!
மேலும், தங்கள் ஊழியர்கள் குடும்பத்தினருடன் கூடி திரையரங்குகளில் படத்தை ரசிக்க விரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், சிலர் தனியாக மட்டும் அல்லாது தங்கள் மனைவி மற்றும் பிள்ளைகளைப் படத்துக்குக் கூட்டி செல்ல விரும்புகிறார்கள். அதற்கான வசதிகளை ஊக்குவிக்கவும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே கூலி' படத்தின் டிரைலரும், பாடல்களும் தற்போது சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றுள்ளன. ரஜினியின் ஸ்டைலிஷ் லுக், லோகேஷின் டைரக்ஷன், அனிருத் இசை, மற்றும் துவக்க சண்டைப் பயிற்சியிலேயே ஏற்பட்ட ஹைபால் இந்த படம் இப்போது மிக முக்கியமான திரை வெளியீடாக மாறியுள்ளது. இந்த நிலையில் Farmers Constructions PTE LTD நிறுவனம் எடுத்துள்ள இந்தப் பாசப்பூர்வமான முடிவு, மற்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே எந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படை என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது.
இதையும் படிங்க: 'கூலி'யில் ஹீரோவே நான் தான்..ரஜினி இல்ல..! நாகார்ஜூனாவின் பேச்சால் குழப்பத்தில் ரசிகர்கள்..!