சினிமா உலகில் போட்டியாளராக நுழைந்து தொகுப்பாளராக மாறி இன்று தனது கோடான கோடி ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான நடிகராக உயர்ந்து புகழின் உச்சியில் இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தனது 25-வது திரைப்படமான ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படம், தனித்துவமான கதைக்களத்துடன் மிகுந்த எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. சினிமாவில் அனுபவசாலி இயக்குநரான சுதா கொங்கரா, ‘சூரரை போற்று’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மிகுந்த பரபரப்பான கதையான 'பராசக்தி' படத்தை இயக்கி வருகிறார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தப் படம், தற்பொழுது அமலாக்க துறையினரின் பிடியில் இருக்கும் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படமாக உருவாகி வருகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனை மையமாகக் கொண்டு கதைக்களம் நகரும் நிலையில், அவருடன் அதர்வா, ரவி மோகன் மற்றும் மலையாள நடிகர் பசில் ஜோசஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கு திரைப்பட துறையின் முன்னணி நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். இசை அமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகவே உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. குறிப்பாக சமீபத்தில் இலங்கையில் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனை அடுத்து தற்போது ‘பராசக்தி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் தொடங்குகிறது. இந்த நிலையில் பராசக்தி படப்பிடிப்பு இத்தனை நாட்களாக நிறுத்தப்பட்டது. காரணம், சிவகார்த்திகேயன் தனது மற்றொரு படமான ‘மதராஸி’யில் சில முக்கிய காட்சிகளில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தளபதி' இடத்தை பிடித்த 'குட்டி தளபதி'..! சினிமாவில் விஜய் பெற்ற சம்பளத்தை தன்வசப்படுத்திய நடிகர் 'SK'..!
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்தின் சில முக்கிய காட்சிகளை முடித்த பிறகு, மீண்டும் ‘பராசக்தி’ படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார். இந்தப் படம் வரும் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் படம் வெளியாவது உறுதி. மேலும், இந்தப் படம் சமூகக் அக்கறையுடன் கூடிய அரசியல் பின்னணியைக் கொண்டதாகவும், சகாப்த மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில் உருவாக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வரும் நிலையில், அவரது இரண்டு படங்களும் எப்பொழுது வெளியாகும் என மக்கள் காத்து கொண்டு இருக்கின்றனர். ஆகவே தற்பொழுது சிவகார்த்திகேயன் மதராஸி ஷூட்டிங்கை முடித்து பராசக்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட பாலிவுட் ஸ்டார் அமீர் கான்..! ஷாக்கில் ரசிகர்கள்..!