சமீபகாலமாக தமிழ் திரையுலகில் வில்லனாக நடித்தவர்கள் அனைவரும் காமெடியனாக மாறி வருகின்றனர். காமெடி ரோலில் நடித்து கலக்கியவர்கள் தற்பொழுது ஹீரோக்களாக மாறி ஆக்ஷன், ரியாக்ஷன், டான்ஸ் என அனைத்திலும் மாஸ் காண்பித்து வருகின்றனர். அந்த வகையில் வைகை புயல் வடிவேலு இப்பொழுது சீரியஸான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். காமெடியனாக உள்ளே வந்த சிவகார்த்திகேயன் குட்டி தளபதியாக உருவெடுத்து நிற்கிறார். காமெடி சூப்பர் ஸ்டாரான சந்தானம் பல படங்களில் ஆக்ஷன் நாயகனாக இருந்து வருகிறார். நடிகர் யோகி பாபு மற்றும் சிவா என அனைவரும் இப்படியே ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

இவர்கள் மத்தியில் பரோட்டோ சாப்பிட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காமெடி நடிகர் என்றால் அவர் தான் நடிகர் சூரி. இந்த நிலையில், முதன் முதலாக நடிகர் சூரியின் எழுத்தில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ள திரைப்படம் தான் 'மாமன்' திரைப்படம். இத்திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று உள்ள நிலையில் படம் மிகுந்த பாசம் கலந்த கலவையாக உள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மாமன் படத்தில் மட்டும் பாசம் அல்ல.. படப்பிடிப்பு முழுவதுமே பாச மழைதான்..! நடிகை ஸ்வாசிகா வெளியிட்ட போட்டோஸ்..!

இந்தப் படத்தை குறித்து பார்த்தால், தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவை குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கைகளை குறித்தும், வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படம் உள்ளது என மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர். நன்றாக இருக்கும் அக்கா தம்பியின் உறவுகளுக்கு விரிசல் விட காரணமாய் அக்காவின் மகனே இருக்கிறார். ஆதலால் தனது தம்பியின் வாழ்க்கையை காப்பாற்ற தனது மகனையும் தம்பியையும் பிரிக்க அக்கா செய்யும் திட்டம் ட்யூஸ்ட்களிலேயே அல்டிமேட் ஆக இருந்தது.

இந்த சூழலில் படம் வெளியான அன்று, ரசிகர்களின் ஆதரவையும் அன்பையும் இப்படம் பெற வேண்டும் என்பதற்காகவும் இந்தப் படம் வெற்றி படமாக மாற வேண்டும் என்பதற்காகவும் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் நடிகர் சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் நடத்தி இருந்தனர் சூரியின் ரசிகர்கள் சிலர். அவர்களை என் தம்பிகளே இல்லை என வசைபாடி தீர்த்தார் நடிகர் சூரி. இந்த சூழலில் நடிகர் சூரி, படம் வெற்றி அடைந்ததற்காக கடவுளுக்கு நன்றி கூறும் வகையில் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து இருக்கிறார் நடிகர் சூரி.
இதையும் படிங்க: உதயநிதிக்கு சந்தானம்.. விஜய்க்கு ஆதரவாக நடிகர் சூரி தேர்தல் பிரச்சாரம்..?