தற்பொழுது உள்ள காலகட்டத்தில் சமையல் நிகழ்ச்சி என்று ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் செய்த சமையல் எப்படி உள்ளது...நன்றாக உள்ளதா..? இல்லையா..? என அனைத்தையும் குறித்து சினிமா ரிவியூ கொடுப்பதை போல பேசி இணையத்தில் பதிவிட்டால் லைக்ஸ் அமோகமாக வருகிறது. அதுமட்டுமல்லாமல், முதலை கறி, வாத்து கறி, பாம்பு கறி என அனைத்தையும் வைத்து சமையல் செய்து "இன்னைக்கு ஒரு புடி, ஆல்வேஸ் வெல்கம் யூ, எல்லாரும் வாங்க" என அழைத்தே பல மில்லியன் பார்வையாளர்களை வைத்து லட்சங்களில் சம்பாரித்து வருகின்றனர்.

இதனை பார்த்த பிரபல தனியார் சேனல் ஒன்று சமையல் நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் ஆனால் மக்கள் அனைவரும் அதை பார்க்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து. நம்மிடம் கோமாளிகள் தான் உள்ளனர் குக்குகள் எப்படி என யோசித்து உள்ளனர். பின் இது நன்றாக உள்ளதே, சமையல் செய்ப்பவர்களுக்கு உதவியாக ஆட்களை வைக்க யாரையோ அழைப்பதை விட நம் குக்குகளை வைத்தே செய்யலாமே என எண்ணி, குக் ப்ளஸ் கோமாளி என இரண்டையும் இணைத்து "குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சியை கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: கருப்பு நிற டிரான்ஸ்பிரண்ட் உடையில்.. சாக்ஷி அகர்வாலின் கிறங்கடிக்கும் கிளிக்ஸ்..!

இந்த நிகழ்ச்சியில் பெரிய ஹீரோக்கள் என சொன்னால், புகழ், பாலா, சுனிதா, ராமர், சரத் உள்ளிட்ட அனைவரும் தான். அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சி பயங்கர ஹிட் அடித்தது. அப்படி பல நாட்களாக வெற்றிகரமாக ஓடிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஒரே எபிசோடில் வந்து முடித்த பெருமை தொகுப்பாளினி பிரியங்காவையே சேரும். காரணம் அந்த ஷோவில் அழகாக தொகுப்பாளினி வேலை செய்து வந்த மணிமேகலைக்கும் அவருக்கும் தொழில் சண்டை வர, அந்த பிரச்சனை பூதாகாரணமானது. பின் மணிமேகலை அந்த ஷோவில் இருந்து வெளியே வர பிரியங்காதான் வின்னர் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்ல, ரசிகர்களால் அதனை ஏற்று கொள்ள முடியவில்லை.

இப்படி இருக்கையில் தற்பொழுது குக் வித் கோமாளி சீசன் 6 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில், முக்கிய கோமாளிகளாக புகழ், சரத், ஜெயசந்திரன், சுனிதா, ராமர் ஆகியோர் இருக்க, தற்பொழுது இந்த வீட்டில் கோமாளியாக நுழைந்த பிக்பாஸ் 8 புகழ் சௌந்தர்யா இவர்கள் லிஸ்டில் புதியதாக இணைந்துள்ளனர். இதனை நினைத்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்த சிறிது நேரத்திலேயே அங்கேயும் சென்று தனது சண்டையை ஆரம்பித்து உள்ளார்.

இந்த சூழலில், தொகுப்பாளர் ரக்ஷனிடம் பேசிய சௌந்தர்யா, முதலில் என்னை குக்காக வந்து சமைக்க சொல்லி தான் அழைத்தார்கள். ஆனால் என்னவென்றே தெரியவில்லை திடீரென என்னை கோமாளியாக மாற்றி உள்ளீர்கள் என்னை ஏன் இப்படி ஏமாற்றினீர்கள் என காட்டமாக பேசி கோமாளி ஷோவை சண்டை ஷோவாக மாற்றி உள்ளார். இப்படி இருக்க, இந்த ஷோவின் தொகுப்பாளர் ரக்ஷன் பேசும்பொழுது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் குறித்து எனக்கு கவலை இல்லை ஆனால் இப்பொழுது இருப்பவர்கள் நல்லபடியாக இருந்தால் போதும் என சூசகமாக மணிமேகலை குறித்து பேசி இவரும் அவர் பங்கிற்கு மக்கள் மத்தியில் ஒரு விமர்சனத்தை கிளப்பியுள்ளார்.

மேலும், தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் நடுவர்களாக இருக்க இந்த ஷோவில் இவர்களுடன் புதியதாக கௌஷிக் ஷங்கர் களமிறங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: இப்படியா படம் எடுப்பாங்க.. யார் அந்த டைரக்டர்..! டூரிஸ்ட் ஃபேமிலி பற்றி விமர்ச்சித்த அமைச்சர் மா.சு..!