அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கி உள்ள 'தி வெர்டிக்ட்' படத்தில் வரலட்சுமி, ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மே 30ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் முழுவதும் அமெரிக்காவில் இயக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய நடிகை வரலட்சுமி, இந்த படத்தில் தன்னை தமிழ்நாட்டை தாண்டி வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த இயக்குனருக்கு நன்றி. இந்த படத்தில் அதிசயமாக என்னையும் ஆங்கிலத்தில் பொறுமையாக பேசவைத்து விட்டார். நான் ஆங்கிலம் வேகமாக பேசிதான் பழக்கம். ஆனால் அது மற்றவர்களுக்கு புரியாது. இருப்பினும் என்னை புரிந்து கொண்டு எனக்கு பிரீடம் கொடுத்த இயக்குனருக்கு நன்றி என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆயுள் தண்டனை பத்தாது.. அந்தரங்க உறுப்பையே அறுக்கணும்..! பொள்ளாச்சி தீர்ப்புக்கு நடிகை வரலட்சுமி பதில்..!

இவரைகளை தொடர்ந்து பேசிய, நடிகை சுஹாசினி, "நான் நடித்த படங்களை பார்க்கும் பல ரசிகர்கள் என்னிடம் வந்து நீங்கள் நடித்த படங்களை நான் சிறிய வயதில் அதிகம் பார்த்ததுண்டு மிகவும் நன்றாக இருந்தது என சொல்லும் பொழுது தான் எனக்கு ஒன்று தோன்றுகிறது. அப்போ நான் சீனியர் சிட்டிசனாக மாறிவிட்டீனா என? ஆனால் அதற்காக நான் வருத்தமடைய வில்லை காரணம் இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்ற பொழுது எனது ரசிகை எனது வயதின் மகத்துவத்தை எனக்கு புரியவைத்தார். காரணம் எனது ரசிகை என்மீது உள்ள அன்பில் படக்குழுவினர் அனைவருக்கும் சமைத்து உணவை பரிமாறி மகிழ்ந்த பொழுது தான் எனக்கு புரிந்தது என் வயதின் அருமை" என்றார்.

அவரை தொடந்து பேசிய நடகர் பார்த்திபன், "தமிழ் சினிமாவில் தனக்கு 50 வயதாகிறது என சொல்லும் தைரியம் உடைய அழகிய நடிகை என்றால் அவர் தான் நம் சுஹாசினி, ஏன் இவர் தைரியமானவர் என சொல்கிறேன் என்றால் பொழுதுவாக 28 வயதுக்கு மேல் பெண்கள் தனது வயதை வெளியே சொல்வது இல்லை. ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் தனது வயதை சொல்லும் தைரியம் உள்ள சுஹாசினி இன்றும் தனது அழகின் மீது அதிக திமிரு கொண்டவர்" என கூறினார்.

இந்த பேச்சை கேட்டு திடீரென எழுந்த சுஹாசினி, "இப்ப எனக்கு வயது 63 ஆகிவிட்டது தெளிவிவாக சொல்லுங்கள் என சொல்ல, பார்த்திபன் பார்த்திங்களா..இதுதான் சுஹாசினியின் அழகிய திமிரு" என்றார்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளிவரும் நடிகை வரலட்சுமியின் திரில்லர் திரைப்படம்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!