தமிழ் சினிமாவில் எத்தனை புது முகங்கள் வந்தாலும் காலத்தால் அழியாத பொக்கிஷமாக பார்க்கப்படும் கதாநாயகன் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் தான் நடிகர் சூர்யா.. இப்படி இருக்கையில் அவரும் புதிய திசையை நோக்கி பயணித்து வரும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியும் இணையும் படம் என்றால் அதன் எதிர்ப்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டடியதில்லை. அதன்படி, இவர்கள் இருவரது கூட்டனில் உருவாகும் திரைப்படம் தான் ‘கருப்பு’.
இப்படம் தற்போது தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று ‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் வெளியானதும் இணையத்தில் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை அட்டகாசமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யா ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை தெளிவாக பார்க்க முடிகிறது. அவரது தோற்றம், நடிப்பு மற்றும் டீசரில் காட்டப்படும் அவரது புது அவதாரம் என அனைத்தையும் பார்த்தால் இப்படம் சைகாலஜிக்கல் த்ரில்லராக உருவாகியிருக்கலாம் என தோன்றுகிறது.

அதில் த்ரிஷா மற்றும் ஸ்வாசிகா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'கருப்பு' படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அந்தப் போஸ்டரில், கருப்பு படத்தின் பின்னணியில், கடுமையான பார்வையுடன் சூர்யா தோன்றி இருக்கிறார். அவரது இரத்தம் தெறிக்கும் கண்கள், வேறுபட்ட உடை மற்றும் தீவிரமான முகம், ரசிகர்களிடையே அதிர்ச்சியும் அதிகளவு ஆவளையும் ஏற்படுத்தியது. ஆகவே இன்று வெளியான டீசர், படத்தின் இயல்பையும், சூர்யாவின் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. சூர்யா இப்படத்தில் சைக்கோலாஜிக்கல் தாக்கம் கொண்ட மனிதனாக தோன்றுகிறார்.
கருப்பு பட டீசர் - கிளிக் செய்து பார்க்கலாம்..
அவரது உடல் மொழி, மிரட்டும் பார்வை மற்றும் டீசரில் வரும் சில வசனங்கள், இந்தப் படம் சாதாரணமான ஒரு கமர்ஷியல் படமல்ல என்பதை எடுத்து காண்பிக்கிறது. மேலும் இந்த டீசரில், நகர வன்முறைகள், பெண்களின் துயரம், சமூகத்தில் ஒடுக்கப்படும் மனநிலைகள் போன்ற அதிக தீவிரமான கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதிகப் படியான சமூக பிரச்சினைகளை எடுத்து சொல்லும் திரைப்படங்களை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி, இந்த முறை ஒரு இருண்ட, தீவிரமான சைகாலஜிக்கல் கதையை இயக்குவதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்த ஹீரோ.. தைரியமாக புகார் கொடுத்த ஹீரோயினுக்கு நூதன மிரட்டல்..! வீடியோ மூலம் கதறல்..!
இதுவரை அவருக்கு வெற்றிகரமான திரைக்கதைகள் பல இருந்தாலும், 'கருப்பு' மூலம் அவர் புதிய பரிமாணத்தை சினிமாவில் துவங்க இருப்பது தெளிவாக தெரிகிறது. மேலும், ‘கருப்பு’ டீசர் வெளியாகிய சில மணி நேரங்களில், யூடியூப்பில் லட்சக்கணக்கான பார்வைகள் மற்றும் ட்ரெண்டிங் இடத்தை பிடித்துள்ளது. இப்போது டீசர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கருப்பு’ என்பது சாதாரணமான திரைப்படம் அல்ல என்பதை டீசர் உறுதிப்படுத்தியுள்ளது. சூர்யாவின் வித்தியாசமான நடிப்பும், ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத் திறமையும் இணைந்து, ஒரு புதிய தரத்தை சினிமாவில் நிலைநிறுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய புரட்சி உண்டாக இருக்கிறது.
இதையும் படிங்க: "எந்திரன்" திரைப்படத்தின் கதை உரிமை விவகாரம்..! ஐகோர்ட்டில் பரிசீலனை செய்யப்பட்ட இயக்குனர் சங்கரின் வழக்குகள் ..!