ஆரம்பத்தில், 2005 ஆம் வருடம் இந்தியில் வெளியான "இல் சந்த் சா ரோஷன் செஹ்ரா" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதே ஆண்டு "ஸ்ரீ" என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு "கேடி" என்ற தமிழ் படத்தில் தமிழில் அறிமுகமானார் தமன்னா பாட்டியா.
இதையும் படிங்க: வெளிநாட்டில் ட்ரெண்டி லுக்கில் நடிகை பிரியங்கா மோகன்..! கலக்கல் ஸ்டில்கள் வைரல்..!

இதனை தொடர்ந்து, சிறுத்தை, பையா, சுறா, படிக்காதவன், தில்லாலங்கடி, தோழா போன்ற படங்களில் நடித்து தனது பெயரை மக்கள் மனதில் பதிய வைத்தார்.

இப்படி, பாலிவுட் மற்றும் கோலிவுட் மார்க்கெட்டில் தமன்னா பெயர் ஒலிக்காத நாளே இல்லை. அந்த அளவுக்கு தமன்னா கால் ஷீட் கொடுக்க கூட நேரமில்லாமல் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அளவிற்கு மாறி இருக்கிறார்.

சிறிது காலம் தமிழ் சினிமாவில் காணாமல் போன தமன்னா திடீரென ஜெயிலரில் "காவாலையா" பாடலில் நடனம் ஆடி மீண்டும் ட்ரெண்ட் ஆனார்.

இதுவரை ஹீரோக்களுடன் காதல் காட்சிகளில் மட்டுமே நடித்த தமன்னா, முதல் முறையாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக அரண்மனை 4ல் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல், இதுவரை முத்த காட்சிகள் மற்றும் மிகுந்த ரொமன்ஸ் காட்சிகளில் நடிக்காத தமன்னா,"ஜீ கர்டா" என்ற ஓடிடி தொடரில் குறைந்த அளவிலான ஆபாச காட்சிகளில் நடித்து இருந்தார்.
இதையும் படிங்க: மல்லிகை பூ வச்சது ஒரு குத்தமா..நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்..! என்ன கொடுமை சரவணன் இது...!