சின்னத்திரை மூலம் புகழ்பெற்று பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் தான் நடிகை பாவனி ரெட்டி. இவர் 'சின்ன தம்பி' தொடர் மூலம் மக்கள் மத்தில் அன்பும், ஆதரவும் பெற்ற பாவனி, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களது அன்பை அதிகமாக சம்பாதித்தார். இப்படி இருக்க, அவர் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பாவனிக்கும், நடன இயக்குநரான அமீருக்கும் இடையில் முதலில் நட்பு மலர்ந்து பின் நாட்களில் காதலாக மாறியது.
இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது, அமீர் பாவனியின் மீது ஒருதலைபட்சமான காதலை மட்டுமே கொண்டிருந்தார். அதே சமயம் பாவனியும் அவருக்கு நேரடியாக பதில் அளிக்காமல் இருந்தாலும், நிகழ்ச்சிக்கு பிறகு இருவருக்கும் இடையே உண்மையான காதல் உறவு மலர ஆரம்பித்தது. இதனையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது போட்டோஷூட், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள், நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்பது என இவர்களின் காதல் பயணம் என அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியத்துடன் எப்பொழுது தான் திருமணம் செய்வீர்கள் என ரசிகர்களே கேட்கும் அளவிற்கு இருந்தனர்.

அதே நிலையில், இருவரும் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த சூழலில், திருமணத்திற்கு பிறகு, அமீருக்கான முதல் பிறந்தநாளை, பாவனி மிகவும் விமரிசையாக கொண்டாடினார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் இருவரது புகைப்படத்துடன் "என் காதலுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நீ என் கணவராக, அம்மாவாக, அப்பாவாக, மருத்துவராக, சமையல் கலைஞராக இருக்கிறாய். ஒரு முழுநேரக் குழந்தையை திருமணம் செய்து அதில் வெற்றியும் பெற்றாய். என்றும் என் மனத்தில் நீ இருப்பாய்" என பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: திடீரென போலீசாக மாறிய நடிகர் ஆரி..! போட்டோவை பார்த்து மெர்சலாகி இருக்கும் ரசிகர்கள்..!
இவர்கள் இருவரும் ‘துணிவு’ திரைப்படத்தில் இணைந்து நடித்ததைத் தொடர்ந்து, பாவனி சமீபத்தில் 'ஓம் காளி ஜெய் காளி' என்ற வெப் சீரிஸில் விமலுடன் இணைந்து நடித்திருந்தார். அவருடைய நடிப்பு பாராட்டைப் பெற்றதோடு, நடிகையாக அவரது தனித்துவமான ஸ்டைலும் வெளிப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் பரிச்சயமான பாவனி – அமீர் ஜோடி, இன்று நிஜ வாழ்க்கையிலும் சிறந்த தம்பதிகளாக வலம் வந்து, ரசிகர்களிடையே காதலுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
இதையும் படிங்க: என் ட்ரெஸ்.. என் உரிமை.. அதை எனக்கு பிடித்தமாதிரி தான் போடுவேன்..! கவர்ச்சி நாயகியின் பேச்சால் பரபரப்பு..!