தமிழ் திரையுலகில் சினிமா பின்புலம் இல்லாமல், முழுமையாகத் தன் திறமையும் உழைப்பையும் வைத்து சாதனை படைத்தவர்களில் முக்கியமான ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகர் ஆரி அர்ஜுனன். இவரது ஸ்டைல் மற்றும் அடையாளம் என பார்த்தால், எளிமை, நேர்மை, சமூகப் பொறுப்பு, தன்னம்பிக்கை என பல காரியங்களை சொல்லலாம். இப்படிப்பட்ட நடிகர் ஆரியின் திரைப்பயணம் என பார்த்தால், ரெட்டை சுழி, மிலாகு, மாயா, தரணி முதலிய படங்களில் பெருமாளும் துணை காதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார்.
அதன்பின் அவரை தனித்துவமாக காட்டிய படம் அதுதான் கடந்த 2014ம் ஆண்டு வெளியான 'நெடுஞ்சாலை' திரைப்படம். இந்த படம் அவரை மிகவும் வலிமையான நடிகராக தமிழக ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து 'மாயா, நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி மற்றும் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' போன்ற படங்களில் சமூக நலக் கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென இரு இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இதனை அடுத்து, கடந்த 2020-ம் ஆண்டில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் சீசன் 4' நிகழ்ச்சியில் ஆரி பங்கேற்ற போது, மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பெற்றார்.

காரணம் அதில், அவரது நேர்மை, நியாய உணர்வு, பொதுமக்களுக்காக பேசும் பாணி என அனைத்தும் இவரை வெற்றியாளராக கொண்டு வந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரது ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக பெருகியது. இந்த சூழலில், தற்போது நடிகர் ஆரி, விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘கோலிசோடா 3’ திரைப்படத்தில் முதன் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது அவரது திரைப்பயணத்தில் ஒரு புதிய பரிமாணமாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என் ட்ரெஸ்.. என் உரிமை.. அதை எனக்கு பிடித்தமாதிரி தான் போடுவேன்..! கவர்ச்சி நாயகியின் பேச்சால் பரபரப்பு..!

இதனை குறித்து பேசிய நடிகர் ஆரி, "சினிமாவில் காக்கிச்சட்டை அணிந்து நடிக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக எனக்குள் இருந்த கனவு. இந்த கதாபாத்திரத்துக்காக நான் எனது உடலை கட்டுப்படுத்தி, எடையை குறைக்க, தீவிர உடற்பயிற்சி செய்தேன். மனரீதியாக நடிக்க தயாராக இருந்த நான் பல்வேறு உயர் போலீஸ் அதிகாரிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் ஆலோசனைகள் கேட்டேன். இது ஒரு உணர்வுப்பூர்வமான பயணமாக எனக்கு இருந்தது. இந்த படம் கண்டிப்பாக சமூக தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார். மேலும், இந்த படத்தில் அவருடன் பரத், ராஜ்தருண், சுனில் போன்ற முன்னணி நடிகர்களும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ஆரியின் சினிமா பயணம், தற்போது ‘கோலிசோடா 3’ மூலமாக அடுத்த பரிமாணத்தில் மக்கள் காவலராக திரையில் தோன்றி, சமூக கருத்துள்ள படத்தை தர இருப்பதால் தற்பொழுது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: 'வார்-2' பட ஹீரோயினுக்கு தேவதை பிறந்துள்ளாராம்..! கொண்டாட்டத்தில் பாலிவுட் ரசிகர்கள்..!