வளர்ந்து வர நேரத்துல நமக்கு இதெல்லாம் தேவையா கோபி, என ஒவ்வொருவரும் கிண்டல் அடிக்கும் வகையில் நடிகை கயாடு லோஹரின் வாழ்க்கை மாறி உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு புகழின் உச்சிக்கே சென்ற அவரது இமேஜ் தற்பொழுது சரிந்து உள்ளது என்று சொல்லலாம். இப்படி இருக்க, டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவை வைத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் 3 ஹீரோயின்கள் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதில், கயாடு லோஹரும் ஒருவர். இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் நடிக்கும் 3ஆவது படமே பெரிய ஸ்டார் மற்றும் பெரிய பட்ஜெட் படம் என பலராலும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகை கயாடு லோஹர் இதயம் முரளி, STR 49, ஜீ.வி.பிரகாஷ் உடன் ஒரு படம் என பல படங்களை தனது கையில் வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தினார் கயாடு. அந்த வகையில், டிராகன் படத்தில் ரூ.30 லட்சம் வரை சம்பளம் பெற்ற கயாடு லோஹர் தற்பொழுது இதயமுரளி மற்றும் சிம்பு படத்தில் நடித்து வருவதால், தான் நடித்து வரும் படங்களுக்கு ரூ.2கோடியை சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: STR-கே ஜோடின்னா சம்பளம் உயர்த்த வேண்டாமா.. என்ன பாஸு..! நடிகை கயாடு லோஹர் அதிரடி..!

இவர் அதிக சம்பளம் கேட்டு கொண்டிருக்கும் இதே வேளையில் அவரையே ஆட்டம் காண வைத்துள்ளது டான் பிக்சர்ஸின் மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர், விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் ஆஜராகாததால் அமலாக்கத்துறையினரின் கண்காணிப்பு வட்டத்தில் வசமாக சிக்கி இருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன்.

தற்பொழுது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோர். ஏனெனில் இவரது டான் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இவர்களது மூன்று பேரின் படங்களையும் தயாரித்து வருகிறது. குறிப்பாக நடிகர் தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 ஆகிய மூன்று படங்களையும் இந்நிறுவனம் மட்டுமே தயாரித்து வருகிறது.

ஆதலால், நடிகர் சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 படப்பிடிப்பு இப்பொழுதுதான் ஆரம்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இப்படமும் சிக்கலில் உள்ளது. இப்படி இருக்க, டாஸ்மார்க் ஊழலை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்த அமலாக்கத் துறை சோதனையில் வசமாக சிக்கி உள்ள தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் லிஸ்டில் நடிகை கயாடு லோஹரின் பெயரும் இடம் பெற்று இருந்தது. இது தொடர்பாக விசாரித்ததில், ஆகாஷ் பாஸ்கரன் நடத்தும் பார்ட்டிகளுக்கு நடிகை கயாடு லோஹர் அடிக்கடி சென்று இருப்பதும் அவர்களது நட்பு வட்டாரத்தில் இவர் இருப்பதும், பல லட்சம் பணங்களை பரிசாக பெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் அவர் நடித்திவரும் எஸ்டிஆர் 49 படம் ஒரு புறம் பாதிக்கப்பட்டாலும், சினிமாவில் ஒரே படத்தில் உச்சிக்கு செல்ல நினைத்த கயாடு லோஹரின் இமேஜும் ரசிகர்களது வெறுப்பையும் சம்பாரித்து படிப்படியாக கீழே இறங்கி வருகிறார் லோஹர். இதனால் மிகுந்த வேதனையில் இருக்கும் நடிகை கயாடு, இவற்றை எப்படி சரி செய்வது மீண்டும் தன்னுடைய ரசிகர்களை கவர என்ன செய்வது என யோசித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எக்ஸ்டரா கியூட்னஸ்... ரியாக்ஷனால் உள்ளதை கொள்ளையடிக்கும் கயாடு லோஹர் போட்டோஸ்!