தமிழ் சீரியல் உலகில் ரசிகர்களின் அன்பைப் பெற்ற 'பொன்னி' சீரியல் கதாநாயகி வைஷ்ணவி, சமீபத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வந்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்ந்து விமர்சனம் செய்வதாகக் கூறும் சிலர் மீது அவர் எடுத்துக்காட்டிய கோபமும், அதில் கலந்து கொண்ட உணர்வும் இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
அந்தவகையில் வெற்றிகரமாக ஓடிய ‘சிறகடிக்க ஆசை’ மற்றும் ‘பொன்னி’ சீரியல்களில் நடித்த வைஷ்ணவி மற்றும் வெற்றி வசந்த், ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 2024 நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இளம் ஜோடிகளாக திரையுலகில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பிரபல பெயர்களாக திகழ்ந்த அவர்கள் திருமண வாழ்க்கையில் நுழைந்த பின்னர் தங்கள் வாழ்க்கையை மிகுந்த சுதந்திரத்துடனும் நிம்மதியுடனும் நடத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நடிகை வைஷ்ணவி வெளியிட்ட வீடியோவில் அவரது பேச்சுக்கள் சினிமா, சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல குடும்பக் கண்களில் உணர்வுப் பாய்ச்சலை உருவாக்கியுள்ளது. அந்த வீடியோவில் கண்ணீர் மல்கக் கதறி, உண்மைகளை வெளிப்படுத்தும் வைஷ்ணவி, சமூக வலைதளங்களில் தன்னை குற்றம் கூறும் சிலரை எதிர்த்து தன்னுடைய மனவருத்தத்தை வெளியிட்டுள்ளார். அதில், “நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். அம்மா அப்பாவை விட்டு வந்து, ரெண்டு சீரியல் பண்ணி, கிட்டதட்ட 6 வருடம் உக்கார்ந்து சாப்பிடவே ரொம்ப கஷ்டமா இருந்தது. இப்போ கல்யாண வாழ்க்கையில் ஒரு அமைதி வேண்டும் என்பதற்காக நான் ஒரு பிரேக் எடுத்திருக்கேன். அவ்வளவுதான். இது என் வாழ்க்கை" என பேச ஆரம்பித்தார். முக்கியமாக “நீ உன் புருஷன் காசுல உக்கார்ந்து சாப்புடுற தண்டசோறு தான” – கேள்வி? என சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட, அதற்கு அவர், “நீ உன் புருஷன் காசுல உக்கார்ந்து சாப்புடுற தண்டசோறு தான நீ? என சொல்லுறீங்க, ஆம்..! என் புருஷன் சம்பாதிக்கிறான், நான் சாப்பிடுறேன். அதைவிட்டுட்டு வேறு யாருடைய காசுலயா நான் சாப்பிடுறேனா? எனக்கு அதுக்கெல்லாம் உரிமை இருக்கு. என் வாழ்க்கை, என் முடிவுகள் அதை யாரும் கேள்விக்குள்ளாக்க முடியாது. நான் ஒரு சாதாரண பெண்மணி. எனக்கு வேலை, குடும்பம் இரண்டும் முக்கியம். ஆனா என் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், எனக்கு அமைதி தேவை. அதனால தான் பிரேக் எடுத்தேன். இந்த முடிவு என் தனிப்பட்டது. யாருக்கும் என்னை குற்றம் கூற உரிமை கிடையாது.” என்றார். பொதுவாக சீரியல் துறையில் பணி புரியும் பெண்கள், வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் சமநிலைப்படுத்த வேண்டிய நிலை இருக்கும். இது எளிதானது அல்ல. இப்படி இருக்க திருமணத்தின் பின் தங்கள் ஜோடி பற்றிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. குறிப்பாக, "வெற்றி வசந்த் சம்பாதிக்கிறார், வைஷ்ணவி இல்லாமல் இருக்கிறார்" என்ற கருத்துகள் வைஷ்ணவியை பாதித்ததாக தெரிகிறது.

ஆனால், அவரது பதில்கள், மக்களின் தவறான பார்வைக்கு நேரடியாக ஒரு பதிலடி. வைஷ்ணவியின் கணவர் வெற்றி வசந்த் இதுவரை இப்பிரச்சனையில் எந்தவொரு பக்குவமான பதிலும் அளிக்கவில்லை. ஆனால், அவர் தொடர்ந்து வைஷ்ணவிக்கு ஊக்கம் தருவதாகத் தெரிகிறது. வைஷ்ணவியின் வீடியோ இப்போது ஒரு சமூக விவாதத்திற்கு தானாகவே வழி வகுத்துள்ளது. பெண்கள் குடும்ப வாழ்க்கைக்காக பணி விட்டு விலகினால், அவர்களை “உயிரோட சுமை” எனக் குற்றம் கூறுவது ஒரு அநியாய பார்வை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. பெண்கள் வேலை செய்யும் உரிமையை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. அவர்கள் ஓய்வெடுக்கும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும், அமைதிக்காக “பிரேக்” எடுக்கும் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்பதுதான் உண்மை சமத்துவம். அதுவும் வைஷ்ணவி இதை நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், அவர் கூறிய வார்த்தைகள் இதை நன்கு வெளிக்கொண்டு வந்துள்ளன.
இதையும் படிங்க: முதன்முதலில் வருத்தப்பட்டு பேசிய நடிகை சன்னி லியோன்..! பணம் இருந்தாலும் இந்த விஷயம் இல்லை என வேதனை..!
வைஷ்ணவி ஒரு பிரபலமான நடிகை. ஆனால், அவரும் நம்மைப் போலவே உணர்வுகளுடன் கூடிய பெண்ணே. நடிக்க நேரத்தில் வேலை செய்து, கஷ்டப்பட்டு, ஓய்வெடுக்கும் போதும் விமர்சிக்கப்படும் பெண். அவர் சீரியலில் கதாநாயகியாக இருந்தாலும், வாழ்க்கையில் அவர் ஒரு சாதாரண பெண். இந்த உண்மையை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகத்தான், அவர் வீடியோவில் தனது உணர்வுகளை முழுமையாக வெளியிட்டிருக்கிறார். ஆகவே “நான் உக்கார்ந்து சாப்பிடுறது என் புருஷன் காசுல தான். அதற்கெல்லாம் உரிமை இருக்கு” என இந்த ஒரு வரி, வைஷ்ணவியின் துணிச்சலான மனநிலையை மட்டுமல்ல, தன் மீது விமர்சனம் செய்பவர்களிடம் காட்டும் நேர்மையும், தைரியமும் கூறுகிறது. அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெண்களின் வாழ்க்கைத் தேர்வுகள் மீது சமூகத்தால் விதிக்கப்படும் “மதிப்பீடுகளுக்கெதிரான ஒரு பதிலடி” என பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாம ஒரு பெண் எந்த நேரத்தில் வேலை செய்ய வேண்டும், எப்போது ஓய்வெடுக்க வேண்டும், எப்போது அமைதியை தேட வேண்டும் என அதை முடிவெடுப்பது அவள் தான். மற்றவர்கள் அல்ல எனவே வைஷ்ணவியின் பேச்சு பல பெண்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் தருவதாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: 38 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை..! சோகத்தில் ஆழ்ந்த சினிமா பிரபலங்கள், ரசிகர்கள்..!