பாலிவுட் திரையுலகத்தில் தன்னைத் தனித்துவமான நடிகையாக மட்டுமல்ல, பலரும் அறிந்தபடி ஒரு மனிதாபிமானப் பூர்வமான பெண்ணாகவும் நிலைநாட்டியவர் நடிகை சன்னி லியோன். அதிக பாசத்தால் நிரம்பிய தாய்மை அனுபவம் குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணல், இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு, பலரின் மனதையும் கண்களையும் கலங்க வைத்துள்ளது.
ஒரு காலத்தில் சர்ச்சைகள் சூழ்ந்தவராக இருந்த சன்னி, இன்று மூன்று குழந்தைகளின் அன்புத் தாயாக, குடும்ப வாழ்க்கையில் அமைதி மற்றும் நிறைவை உணர்கிறார். தனது வாழ்க்கையின் முக்கியமான பக்கங்களை பகிர்ந்த அவர், “காதல், தாய் பாசம், தியாகம்” ஆகியவை எல்லாம் ரத்த உறவுகளால் மட்டும் வராது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். கனடாவைச் சேர்ந்த சன்னி லியோன், 2011-ம் ஆண்டு, தனது காதலரும் இசைக்கலைஞருமான டேனியல் வெபர்வை திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் திரையுலக வாழ்க்கையில் இருந்தாலும், தங்கள் உறவை மிக எளிமையாக, உறுதியுடனும் அனுசரணையுடனும் கையாள்ந்தனர். திருமண வாழ்க்கையின் சில வருடங்கள் கழித்தும், தாயாகும் கனவு சன்னிக்கு எளிதில் பலிக்கவில்லை. இதுதான் அவரது நேர்காணலில் பிரதானமாக பேசப்பட்ட அம்சமாகும்.

இப்படி இருக்க சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் சன்னி லியோன் பேசுகையில், “நான் 38 வயதில் திருமண வாழ்க்கையை தொடங்கினேன். உடனே குழந்தைகள் வேண்டும் என்ற ஆவல் வந்தது. நாங்கள் 6 முதல் 10 மாதங்கள் வரை இயற்கையாகவே கருத்தரிக்க முயற்சித்தோம். ஒருமுறை கர்ப்பமான போது, மருத்துவர்கள் கூறியது என் உயிருக்கும், குழந்தைக்கும் ஆபத்தான நிலை என்று. வயிற்றில் வளர்ச்சியற்ற நிலை ஏற்பட்டது. அதற்குப் பிறகு, பல்வேறு செயற்கை கருத்தரிப்பு முறைகளைச் செய்து பார்த்தோம். IVF, IUI போன்ற சிகிச்சைகளுக்கு பணம், மனவலிகள், உடல் வலி என எதுவும் குறைவாக இருந்தது இல்லை. ஆனால் இறுதியில் எல்லாமே தோல்வியடைந்தன.. ஒரு கட்டத்தில், ‘கடவுள் எனக்கு தாயாகும் வாய்ப்பு தர மறுக்கிறார்’ என்று வருந்தினேன். அதுதான் என் வாழ்க்கையின் மிக கடினமான தருணம். ஆனால், அப்போதுதான் ஒரு சிந்தனை தோன்றியது. 'தாயாக இருப்பது பிறந்த குழந்தைகளால் மட்டுமா? நாம் ஏன் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கக்கூடாது?' என்பதே அந்த சிந்தனை.” என்றார். அந்த நேரத்தில் சன்னியின் மனதில் ஏற்பட்ட வலியை அவர் வார்த்தைகளால் வெளிப்படுத்தும்போது, எத்தனையோ பெண்களின் உணர்வுகளுக்கு குரல் கொடுத்தார். இது சாதாரணமான ஒரு பிரபலத்திடம் எதிர்பார்க்கும் பேச்சு அல்ல. இது, ஆயிரக்கணக்கான பெண்களின் மௌன வலிகளை வெளிப்படுத்தும், வெளிச்சம் வைக்கும் உரையாடலாகும். இதில் சொன்னது போல தத்தெடுக்க முடிவெடுத்த சன்னி அந்த எண்ணத்தின் பயனாக, 2017ஆம் ஆண்டு, நிஷா கவுர் வெபர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தனர். மகாராஷ்டிராவின் லதூர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்திலிருந்து, நிஷா அவர்கள் வீட்டில் அன்பும் பாதுகாப்பும் பெற்றார். அதன்பின் 2018இல், சூரோகசி மூலம் இரட்டைக் குழந்தைகள் — நோவா மற்றும் ஆஷர் அவருக்கு பிறந்தனர். இப்போது, மூன்று குழந்தைகளுடன் கூடிய குடும்பத்தில் சன்னி மற்றும் டேனியல் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இதனை குறித்து அவர் பேசுகையில், “இப்போது என்னுடைய வாழ்க்கை முழுமையாக நிம்மதியாகவும், நன்றியுடனும் இருக்கிறது. நிஷா, நோவா, ஆஷர் என மூன்று குழந்தைகளும் என்னுடைய வாழ்க்கையின் ஒளி. கடவுள் எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. தத்தெடுத்த குழந்தை எனது இல்லையா என்ற கேள்வி சிலரிடம் இருந்து வரும். ஆனால், நான் ஒரு நாள் முழுவதும் வேலை செய்து வீடு திரும்பும் போது, எனக்கு ஓடி வந்து கட்டியனைக்கும் அந்த பாசத்தை என்னால் விளக்க முடியாது. அது எனக்கு சொந்த மகள் தான்.” என கூறினார்.
இதையும் படிங்க: 38 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை..! சோகத்தில் ஆழ்ந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்..!
அவரது இந்த பேச்சு, இன்று குழந்தை இல்லாமல் மனவேதனையில் வாழும் பல தம்பதிகளுக்கும் ஒரு ஊக்கமாக அமைந்திருக்கிறது. பாலிவுட்டில் ஆரம்ப காலங்களில் சன்னி லியோன் ஒரு சர்ச்சைக்குரிய நாயகியாக இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில், அவர் தனது பயணத்தை முழுமையாக மாற்றியுள்ளார். திரைப்படங்களில் நடித்து வந்தாலும், குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும் அவர், இன்று ஒரு பொறுப்பான தாயாகவும், வழிகாட்டியாகவும் பலருக்கு மாறியுள்ளார். ஆகவே “தாய் என்பது குழந்தையை சுமக்கும் பெண்மையும் தான். ஆனால் அதை வளர்க்கும் அன்பும், பாசமும் அதன் மறுபக்கம்” என இதை சன்னி லியோன் தனது வாழ்க்கையின் மூலம் நமக்கு காட்டியுள்ளார்.

சன்னியின் பேச்சு ஒரு பெண்ணின் மிகவும் நல்ல மாற்றத்தை மட்டுமல்ல, ஒரு சமூக ஒளியை தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது. தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும், சுரோகசி முறையில் பிறந்த குழந்தைகளுக்கும் தாயான சன்னி, உண்மையில் தாய்மையின் பல்வேறு பரிமாணங்களையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: உண்மையாகவே நடிகர் அஜித் குமார் கோபக்காரர் தான் போல..! மீடியாவிடம் என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!