தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியின் 52வது படம் தற்போது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அந்த வகையில், ‘தலைவன் தலைவி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த புதிய படத்தை பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். அவரும் நடிகர் விஜய் சேதுபதியும் முதல் முறையாக இணைந்திருப்பது தான் இந்த படத்தின் பிரதான சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. அனைவரது கவனத்தையும் பெற்ற இந்த படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான 'சத்ய ஜோதி பிலிம்ஸ்' மிகுந்த பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
குடும்பப் பின்னணியில் சமூகத்தின் நடுநிலை மனிதர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா கடையில் வேலை பார்க்கும் சாதாரண மனிதராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையான நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். பல நாட்கள் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் படக்குழு அறிவிப்பின் படி, அனைவரது கவனத்தையும் பெற்ற ‘தலைவன் தலைவி’ படம் வருகின்ற ஜூலை 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் போஸ்டரும், டீசரும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான டைட்டில் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. தமிழில் 'தலைவன் தலைவி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு, தெலுங்கில் ‘சார்.. மேடம்’ (Sir Madam) என தலைப்பு வைத்துள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் தெலுங்கு டீசரை விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். தெலுங்கில் வெளியாகி இருக்கும் டீசரில், விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பாரம்பரிய வாழ்க்கையை கொண்ட சாதாரண தொழிலாளியாகவும், நித்யா மேனன் அவரின் மாறுபட்ட மனப்பான்மையைக் கொண்ட துணையாகவும் வருவது போன்ற காட்சி நம்மை சிந்திக்க வைக்கிறது. இருவருக்குமான உரையாடல்கள், நேர்த்தியான வசனங்கள், எளிய வாழ்க்கை முறை முதலானவை டீசரில் அதிகமாக பிரதிபலிக்கின்றன. தற்போது திரை உலகில் குடும்பதன்மையைக் கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு பெற்றுவரும் நிலையில், இந்த படம் அந்தப் பரிமாணத்தில் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் என்பதால், பார்வையாளர்களை நேர் முறையில் தொடும் உணர்வுபூர்வமான காட்சிகள், தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமன்றி தெலுங்கு மக்களுக்கும் மிகவும் நெருக்கமாக இருக்குமென நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: "தலைவன் தலைவி" ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா..? அசத்தலாக வெளியிட்ட படக்குழு..!
மேலும் இப்படத்திற்கு வலு கூட்டுவது இசையமைத்துள்ளார் தமன். இவர் வழங்கிய பின்னணி இசை மற்றும் பாடல்கள் படம் வெளிவருவதற்கும் முன்பே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இப்படி இருக்க, ‘தலைவன் தலைவி’ படம், குடும்பம், கண்ணியம் மற்றும் வாழ்க்கை முழுவதையும் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்று திரைப்படம் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்போது, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் வெளியீடு செய்யப்படும் காரணத்தால், இந்த படம் இரு மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பது, பாண்டிராஜ் போல உணர்வுப் பூர்வமான இயக்குனரின் கதை சொல்லும் பாணி, நித்யா மேனன் மற்றும் யோகி பாபு போன்ற சிறந்த நடிப்பாளர்களின் பங்களிப்பு ஆகியவை இணைந்து 'தலைவன் தலைவி' படத்தை இந்த ஆண்டின் முக்கிய திரைப்படமாக மாற்றியிருக்கின்றன.

ஜூலை 25ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் தற்போது வெளியான ‘சார் மேடம்’ டீசரை பார்த்ததிலிருந்து முழு படத்தையும் பார்க்க ஆவலாக உள்ளனர் ரசிகர்கள்.
இதையும் படிங்க: விமரிசையாக நடைபெற்ற நகைச்சுவை நடிகர் கிங்காங் மகள் திருமணம்..! மணமக்களை வாழ்த்திய திரை பிரபலங்கள்..!