மக்களால் அன்றும்,இன்றும்,என்றும் 'கேப்டன்' என அன்போடு அழைக்கப்படுபவர் தான் மறைந்த தேமுதிகவின் தலைவரும் நடிகருமான "விஜயகாந்த்"அவர்கள் தான். இப்படி ஒரு மனிதனை இந்த உலகம் கண்டதில்லை இனி காண போவதுமில்லை என்று சொல்லும் அளவிற்கு அன்புக்கு ஒரு தலைவர் என்றால் அவர் தான் விஜயகாந்த்.

அனைவரும் இன்று "தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு" என்று கூறுகிறார்கள் என்றால் அந்த அடைமொழி வார்த்தைக்கு சொந்தக்காரரே விஜயகாந்த் தான். இவரது படம் எந்த அளவிற்கு ஃபேமஸோ அதே அளவுக்கு இவரது அரசியல் செயல்பாடுகளும் ஃபேமசாக இருந்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் தைரியமாக பேசும் ஒரே மனிதர் என இன்றும் மக்கள் அவரைப் பற்றிய புகழாரங்களை சூட்டி வருகின்றனர். இவரது மேடைப் பேச்சுக்களில் என்னதான் இவர் கேலிக்கிண்டல்கள் செய்யப்பட்டாலும், ஒரு மேடையில் "என்னடா காசு காசு காசு, வரும்போது ஒன்றும் கொண்டு வரல, போகும்போது ஒன்றும் கொண்டு போக போறது இல்ல, கடைசில அர்னாகொடி வரைக்கும் அறுத்துட்டு தான் புதைக்க போறாங்க.
இதையும் படிங்க: "திடீர் தளபதிக்கு வந்த திடீர் சிக்கல்".. சிவகார்த்திகேயனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..!

உங்க வீட்டுக்கு வந்தா ஒரு படி சோறு போட மாட்டீங்களா.." எனக்கேட்டு அனைவரையும் கண்கலங்க வைத்த உண்மையான மனிதன். இவரது இறப்பு என்பது அனைவருக்கும் பேரிடியாக விழுந்தது. அவரது மறைவின் பொழுது கருடன் பறந்தது எல்லாம் செய்திகளில் விமர்சையாக பேசப்பட்டது. அவர் மரணித்த இந்த வேளையிலும் அவர் உருவாக்கிய கட்சி அலுவலகத்தில் இன்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்கப்பட்டு வருகிறது. அப்படி மறைந்தாலும் மக்கள் மனதில் மறவாமல் இருப்பவர்தான் விஜயகாந்த்.

அந்த வகையில் அவரது மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் 'படைத்தலைவன்' என்ற படம் நாளை வெளியாக இருந்தது. இப்படத்திற்கான வேலைகளும் மும்முறமாக நடைபெற்ற வந்தது. சமீபத்தில் இப்பட இசை வெளியீட்டு விழாவில் பிரேமலதா விஜயகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சசிகுமார் என அனைவரும் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக்கினர். இந்த சூழலில், நாளை படம் வெளியாக உள்ள இந்த வேளையில் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினாலும், ரூபாய் 10 கோடி அளவுக்கு ஏற்பட்ட செட்டில்மெண்ட் பிரச்சினைகளாலும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஆனாலும் சொன்ன நேரத்திற்கு படம் வெளியாக வேண்டும் என பிரேமலதா விஜய்காந்த் ஒரு புறம் பிரஷர் கொடுத்து வந்தாலும், நாளை விஜய் சேதுபதியின் 'Ace' படம் ரிலீஸ் ஆவதாலும், சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' மற்றும் சூரியன் 'மாமன்' படம் ஆகியவையும் திரையரங்குகளை முழுவதுமாக கையில் எடுத்துள்ளதாலும் அவருடைய படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

இருப்பினும் மனம் தளராத விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் அவரது இன்ஸ்டால் ஸ்டோரியில், "அனைவருக்கும் வணக்கம், "படைத்தலைவன்" திரைப்படம் மே 23ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கிட்டு சிக்கல்களின் காரணமாக பட வெளியீடு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேசிய வெளியிட்டு தேதியை விரைவில் உறுதி செய்து அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவருடைய படைத்தலைவன் படம் நாளை வெளியாகவில்லை என்பதை அவரே உறுதி செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: என்ன ஆரம்பிக்கலாமா.. பிளாஸ்ட் கன்பார்ம்..! வந்தது விஜய்சேதுபதியின் "Ace" படத்தின் முதல் விமர்சனம்..!