தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதி, ஆக்சன் கிங் என பலர் இருந்தாலும் மக்களுக்குப் பிடித்த ஒரே ஒருவர் என்றால் அதுதான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. பார்க்க ஹீரோ லுக்கிலும் இல்லாமல், வில்லன் லுக்கிலும் இல்லாமல், காமெடியன் லுக்கிலும் இல்லாமல் இருக்கும் இவர், கதாபாத்திரம் என்று வந்துவிட்டால் அதற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டு முழு நடிப்புத் திறமையும் காண்பித்து மக்களை கொள்ளை கொள்ளும் திறமை உடையவர். இப்படிப்பட்ட விஜய் சேதுபதி திரையுலகில் பிரபலமாக, எடுத்துக் கொண்ட திரைப்பயணம் என்பது மிகவும் கடினமான பாதை.

தமிழ்நாட்டில் ராஜபாளையத்தில் பிறந்த இவர், தனது வாழ்க்கையில் கணக்காளராக வேலை செய்ய தொடங்கினார். அந்த வேலை அவருக்கு பிடிக்காமல் போக, ஒருவர் ஸ்கிரீனில் அவருடைய முகம் நன்றாக இருக்கிறது என்று சொல்ல, கூத்து பட்டறைக்கு சென்று கணக்காளராக பணிபுரிந்து பல திரை பிரபலங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு சினிமா துறையில் மேலே வந்தவர்.
அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு "தென்மேற்கு பருவக்காற்று" என்ற படத்தில் நடித்தார். இதனை அடுத்து 2012ல் 'பீட்சா' என்கின்ற படத்தில் தனது முழு திறமையும் காண்பித்து பாதி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பின்பு இவரது நடிப்பில் வெளியான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்ற படத்தில் நடித்த விஜய் சேதுபதியை மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர்.
இதையும் படிங்க: வெள்ளை நிற புடவையில் மகாராணியாக மாறி... கேன்ஸ் அரங்கையே அதிர வைத்த ஐஸ்வர்யா ராய்!

இப்படி இருக்க விஜய் சேதுபதி ஆரம்பத்தில் குணச்சித்திர நடிகராக இருந்து துணை நடிகராக மாறி, கதாநாயகனாக அவதாரம் எடுத்த அவர் தற்பொழுது வில்லனாக கலக்கி வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படத்தில் வில்லன் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மாறி இருப்பார். அதேபோல் நடிகர் விஜயின் 'மாஸ்டர்' திரைப்படத்தில் 'பவானி' என்கின்ற கேரக்டரில் மோசமான வில்லனாகவே மாறி அனைவரையும் கதி கலங்க வைத்தார். தமிழகத்தை கடந்து பான் இந்தியா ஸ்டார் ஆக மாறி, இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தில் 'காளி' என்கின்ற கேரக்டரில் மாஸ் வில்லனாக நடித்திருப்பார் விஜய் சேதுபதி.

இப்படிப்பட்ட விஜய் சேதுபதி சில நாட்களாக கதாநாயகனாக நடிக்காமல் அமைதி காத்து வருகிறார். விஜய் சேதுபதி இதுவரை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, தென்மேற்கு பருவக்காற்று, சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வன்மம், ரம்மி, பண்ணை யாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், நானும் ரவுடிதான், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய், றெக்க, ஆண்டவன் கட்டளை, தர்மதுரை, காதலும் கடந்து போகும், சேதுபதி,

இறைவி, கதாநாயகன், கவன், விக்ரம் வேதா, புரியாத புதிர், கருப்பன், 96, மேற்கு தொடர்ச்சி மலை, இமைக்கா நொடிகள், ஜூங்கா, சீதக்காதி, செக்கச் சிவந்த வானம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சிந்துபாத், சாயிரா நரசிம்மரெட்டி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட, சங்கத் தமிழன், தீர, ஓ மை கடவுளே, கணவன் பெயர் ரண சிங்கம், துக்ளக் தர்பார், குட்டி ஸ்டோரி, அனபெல் சேதுபதி, நவரசா, மாஸ்டர், முகில், லாபம், மாமனிதன், டிஎஸ்பி, காத்து வாக்குல ரெண்டு காதல், கடைசி விவசாயி, விக்ரம், விடுதலை, ஜவான், யாதும் ஊரே யாவரும் கேளிர், மைக்கேல், விடுதலை டு, மேரி கிறிஸ்மஸ், மகாராஜா, வசந்தகுமாரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில், நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பப்லு, கேஜிஎஃப் அவினாஷ், திவ்யா பிள்ளை, ஆகியோருடன் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் Ace. இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கான டிரேட் ஷோவை பார்த்தவர்கள் தங்களின் முதல் விமர்சனத்தை எக்ஸ் தலத்தில் பதிவிட்டு உள்ளனர். அந்த வகையில் நாகநாதன் என்பவர் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில், படம் சிறப்பாக உள்ளது என்றும் விஜய் சேதுபதி இந்தப் படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும்.

மேலும் பிளாஸ்ட் நிறைந்த திரைப்படம் என்றும் பதிவிட்டு இருக்கிறார். முதல் ரிவியூவே பாசிட்டிவாக இருக்க நாளை படத்தைக் காண மக்கள் ஆவலாக உள்ளனர்.
இதையும் படிங்க: கேன்ஸ் விழாவில் பேக் லெஸ் உடையில்... முரட்டு கவர்ச்சி காட்டிய ஜான்வி கபூர்!