இன்று ஹீரோயின்களில் "லேடி சூப்பர் ஸ்டார்" நான் தான்...இல்லை நான் தான்...என சண்டையிட்டு வலம் வருபவர்கள் மத்தியில் இன்றும் தொகுப்பாளர்களில் 'லேடி சூப்பர் ஸ்டார்' ஆக இருப்பவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.

இப்படி பார்க்க அழகாகவும் கொழு கொழு கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் சிங்கர், டான்ஸ் நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தன் கையில் வைத்து அசத்தி வருகிறார்.
இதையும் படிங்க: சுதந்திர தினத்தில் பிறந்த ஆக்ஷன் கிங்..! நாட்டுப்பற்றுடன் உலகத்தை கண்ட அர்ஜுனுக்கு குவியும் வாழ்த்து..!

இப்படி இருக்க, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தனி ஒரு ஆளாக நின்று நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கொண்டு செல்வதில் வல்லவர்.

ஆனால் இவரது திறமையை மற்றொருவருடன் சேர்த்து பகிர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த நிகழ்ச்சி இயக்குனர், அவருடன் மாகாபா ஆனந்தை சேர்த்து எல்லா நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்க விட, ஷோக்கள் ஹிட் ஆனது.

இன்று இவர்கள் இருவரது புகழ், பல பிரபலங்கள் மத்தியில் கொடிகட்டி பறந்து வருகின்றது.

இதனை அடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி போர் அடித்துப் போன பிரியங்கா.. அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.

ஆனால் அவர் களம் இறங்கிய பின்பு போட்டியில் விறுவிறுப்பு ஒரு பக்கம் அதிகரிக்க மறுபக்கம் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியான மணிமேகலைக்கும் அவருக்கும் இடையே யார் மிகப்பெரிய தொகுப்பாளினி என்ற சண்டை ஆரம்பித்தது.

இப்படிப்பட்ட தான சூழலில் நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த தொகுப்பாளனி பிரியங்கா, திடீரெனஒரு நாள் பிஸ்னஸ் மேன் வசி என்பவருடன் ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

பின் பாவனி கல்யாணத்திற்கு தனது புது கணவருடன் சென்ற பிரியங்கா, அதற்கு பிறகு ஹனிமூனில் பிசியாக இருந்து வருகிறார்.

மேலும் கல்யாணத்திற்கு பிறகு வாழ்க்கை ஜாலியாக உள்ளது என தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: "கூலி" ரிலீசுக்கு பின் தனது உடலை தண்டிக்கும் சூப்பர் ஸ்டார்..! வைரலாகும் வீடியோவை பாருங்க..!