தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களி நடித்து வந்த இளம் நடிகரும், பிரபல இசையமைப்பாளரான மறைந்த சபேஷின் மகனுமான கார்த்திக் சபேஷ் உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகர் கார்த்திக் சபேஷ், திரையுலகப் பின்னணி கொண்ட ஒரு முக்கியக் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பல படங்களில் பங்காற்றியுள்ளார்.
கார்த்திக் சபேஷ் 2004 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய 'ட்ரீம்ஸ்' (Dreams) திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவராகவும், கதாநாயகர்களின் நண்பனாகவும் பல முக்கியத் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: “இது மட்டும் நடந்து இருந்தா தேவா உயிரை காப்பாற்றி இருக்கலாம்”... தனியார் மருத்துவமனை மருத்துவர் சொன்ன ஷாக்கிங் தகவல்...!
2006ல் சிலம்பரசன் இயக்கி நடித்த வல்லவன் திரைப்படத்தில் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து 2009ல் வெளியான குளிர் 100° திரைப்படத்திலும் கவனம் பெற்றார்.
2010 ஆம் ஆண்டு வெளியான காதல் சொல்ல வந்தேன் திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதில் நடிகர் பாலாஜி கிருஷ்ணனுடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
பட்டத்து யானை (2013), பர்மா (2014), ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் (2014), மகாபலிபுரம் (2015) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமல்லாமல் 'தகிடா தகிடா', 'மொதலாயின்தி எலா' போன்ற தெலுங்குத் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
தேவா குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி:
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான 'தேனிசைத் தென்றல்' தேவா (வயது 75), அக்டோபர் 17ம் தேதி அன்று சென்னையில் திடீர் மாரடைப்பு காரணமாகக் காலமானார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சூர்யா மருத்துவமனைக்குக் காலை 9 மணியளவில் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது இதயத்துடிப்பு நின்றிருந்தது. மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் 'சிபிஆர்' சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு ஏற்கனவே பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 23ம் தேதி, 2025ம் ஆண்டு ஆண்டு பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் நடிகர் கார்த்திக் சபேஷின் தந்தை ஆவார்.
இப்படி தேவா குடும்பத்தில் அடுத்தடுத்து சோக சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது சபேஷின் மகனான கார்த்திக் சபேஷ் உடல் நலக்குறைவால் 37 வயதிலேயே உயிரிழந்தது திரையுலகை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினர் கார்த்திக் சபேஷ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சின்னத்திரையில் கலக்கிய மோனிஷா..!! இப்போ செம ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!