• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசு அலுவலகங்களில் எத்தனை சாதிய வன்கொடுமை வழக்குகள்? உயர்நீதிமன்றம் கேள்வி!

    கடந்த 5 ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை புகார்கள் பதிவு செய்துள்ளனர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 20 Oct 2026 16:57:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras HC Seeks 5-Year Report on SC/ST Act Cases in Tamil Nadu Govt Offices

    தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், தங்களது உயர் அதிகாரிகள் அல்லது சக பணியாளர்கள் மீது கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் எத்தனை புகார்களைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மனிதவள மேம்பாட்டுத் துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    நெல்லை அண்ணா நகரைச் சேர்ந்த ஜோதிவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நான் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தேன். இந்நிலையில், என்னை குவாச்சிப்பட்டி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதிகார வரம்பற்ற முறையில் பிறப்பிக்கப்பட்ட இந்த இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த இடமாறுதல் உத்தரவு பழிவாங்கும் நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இணை இயக்குநருக்கு மட்டுமே இடமாறுதல் ஆணை பிறப்பிக்க அதிகார வரம்பு உள்ள நிலையில், முதன்மைக் கல்வி அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என வாதிடப்பட்டது.

    இதையும் படிங்க: e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    Madras hc

    அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கும், முதன்மைக் கல்வி அலுவலருக்கும் இடையே சுமூகமான பணி உறவு நீடிக்கவில்லை. மனுதாரர் தொடர்ந்து அதே பணியிடத்தில் நீடித்தால் முதன்மைக் கல்வி அலுவலரின் தினசரி நிர்வாகப் பணிகளுக்குக் கடுமையான இடையூறு ஏற்படும் சூழல் உள்ளது எனத் தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி புகழேந்தி, அதிகார வரம்பு மீறிப் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் மனுதாரரின் இடமாறுதல் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் மீண்டும் பணியில் சேரலாம் என்றும், எனினும் வரும் அக்டோபர் 26 வரை அவர் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக எந்தவொரு பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.

    தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் தன் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்ப் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் மிகக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கில் நீதிமன்றம் தாமாக முன்வந்து மனிதவள மேம்பாட்டுத் துறை செயலரை எதிர்மனுதாரராகச் சேர்க்கிறது. 

    தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், தங்களது உயர் அலுவலர்கள் அல்லது பிற ஊழியர்கள் மீது கடந்த 5 ஆண்டுகளில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் எத்தனை புகார்களைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த முழுமையான அறிக்கையை மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

    இதையும் படிங்க: வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    மேலும் படிங்க
    டெல்லியில் "WORK FROM HOME"..! குளிர்கால மாசு கட்டுப்பாடு..! முக்கிய உத்தரவு..!!

    டெல்லியில் "WORK FROM HOME"..! குளிர்கால மாசு கட்டுப்பாடு..! முக்கிய உத்தரவு..!!

    இந்தியா
    மக்களே கவனிங்க.! காவலர் நினைவு நாள் அணிவகுப்பு.! மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்.!!

    மக்களே கவனிங்க.! காவலர் நினைவு நாள் அணிவகுப்பு.! மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்.!!

    தமிழ்நாடு
    பாராட்டு-னா திமுக..! பிரச்சனை-னா ஆளுங்கட்சி..! இதான் அவங்க..!! சேகர்பாபுவை வெளுத்த அமைச்சர் விஜய் பாலாஜி..!!

    பாராட்டு-னா திமுக..! பிரச்சனை-னா ஆளுங்கட்சி..! இதான் அவங்க..!! சேகர்பாபுவை வெளுத்த அமைச்சர் விஜய் பாலாஜி..!!

    தமிழ்நாடு
    845 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: ஏடிசி தின விழாவில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு!

    845 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: ஏடிசி தின விழாவில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய் ஆட்சி ஒழிக"..! மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற கார்த்திகா கண்டன முழக்கம்.!!

    "விஜய் ஆட்சி ஒழிக"..! மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற கார்த்திகா கண்டன முழக்கம்.!!

    தமிழ்நாடு
    பேஷ்! பேஷ்! அறிவுலகத்திற்கே லீவு விட்ட அறிவார்ந்த ஆட்சி தவெக ஆட்சி! TRB ராஜா கடும் தாக்கு..!!

    பேஷ்! பேஷ்! அறிவுலகத்திற்கே லீவு விட்ட அறிவார்ந்த ஆட்சி தவெக ஆட்சி! TRB ராஜா கடும் தாக்கு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டெல்லியில்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share