மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியானது பான் இந்தியா அதிரடி திரைப்படமான 'தக் லைஃப்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார்.

முதலில் தக் லைஃப் படத்தின் டைட்டில் பாடலும் அதில் கமல்ஹாசன் ரங்கநாயகன் சக்திவேல் நாயக்கர் நியாபகம் வச்சிக்கோங்க என சொன்னது அனைவரையும் புல்லரிக்க செய்தது. இதனை அடுத்து வெளியான ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா.. என்ற பாடல் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றது. இப்பாடலில் இடம்பெற்ற நடன காட்சிகள் அனைவரது மனதையும் கவரும் வகையில் இருந்தது. இதனை அடுத்து வெளியான "விண்வெளி நாயகா" என்ற பாடல் ஸ்ருதி ஹாசன் அவரது தந்தைக்காக பாடிய பாடலாக இருந்தது.
இதையும் படிங்க: சுப்ரிம் கோர்ட் கொடுத்த டோஸ்.. அதிரடி முடிவெடுத்த கன்னட துணை முதல்வர்.. விரைவில் தக் லைஃப் ரிலீஸ்..!

இந்த பாடல்களை விட "ஓ மாறா" பாடலின் லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். 'ஜம்பப்பா மன்னாரே' என தொடங்கும் இப்பாடலின் வரிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், ஊர் எதிர்த்தாலும் அவனுக்கு ஆயிரம் யானை-யின் பலம் ! யார் தடுத்தாளும் அதை போரிட்டு முடிகிற குணம் ! இது யாருக்கும் அடங்காத ரணம் !இங்கே அவனுக்கும் பயம் இல்லே டா என்ற வரிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.
இப்படி பாடல்களே பயங்கர ஹிட் கொடுத்திருக்கும் வகையில், கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என அனைவரும் சொல்லிக்கொண்டிருக்க, படமும் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடகா தவிர்த்து உலகம் முழுவதும் கடந்த 5ம் தேதி வெளியானது.

நாயகன் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் மீண்டும் இணைந்ததால், ரசிகர்கள் மற்றொரு கிளாசிக் படத்தை எதிர்பார்த்தனர். இருப்பினும், ''தக் லைப்'' படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.
3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியான நிலையில் படம் எதிர்மறை விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதுவரை சமூக வலைதளங்களில் ஒரு விமர்சனம் கூட தக் லைஃப் படத்திற்கு ஆதரவாக இல்லை. அந்த அளவுக்கு படத்தை நார் நாராக கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். படம் வெளியாகி 9 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 50 கோடி ரூபாய் வசூலை தொடவே போராடுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ''தக் லைப்'' படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இயக்குனர் மணிரத்னம் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். "நானும் கமல்ஹாசனும் இணைகிறோம் என அறிவித்தவுடன் மற்றொரு நாயகன் படம் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். இதனால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நாயகனுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமே கிடையாது. முற்றிலும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படத்தை வழங்க வேண்டும் என எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் கொடுத்ததை விட ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட நாங்கள் கொடுத்த தக் லைஃப் வேறொன்றாக இருந்திருக்கிறது. இதற்காக ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ‘தக் லைஃப்’ பட வெளியீடு விவகாரம்.. கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!