2022 டிசம்பரில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம், விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த விளையாட்டு நாடகமாகும். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்டி டீம் ஒர்க்ஸ் தயாரிப்பில், ரவி தேஜாவுடன் இணைந்து விஷ்ணு விஷால் இப்படத்தைத் தயாரித்தார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த இப்படம், கட்டா குஸ்தி எனும் மல்யுத்தத்தை பின்னணியாகக் கொண்டது.

கதையில், விஷ்ணு விஷால் ஊரில் கபடி விளையாடி, படிக்காத, நீளமான கூந்தல் கொண்ட மனைவியை விரும்பும் வீராவாக நடிக்கிறார். மறுபுறம், ஐஸ்வர்யா லட்சுமி, பாலக்காட்டைச் சேர்ந்த கட்டா குஸ்தி வீராங்கனை கீர்த்தியாக, தனது திறமை காரணமாக திருமணத்தில் தடைகளை எதிர்கொள்கிறார். பொய்கள் மூலம் இவர்களுக்கு திருமணம் நடக்க, உண்மை வெளிப்படும்போது நகைச்சுவையும் உணர்ச்சிகளும் கலந்த காட்சிகள் அரங்கேறுகின்றன.
இதையும் படிங்க: அதிரடியாக வெளியானது 'ஆர்யன்' பட ரீலிஸ் அப்டேட்..! விஷ்ணு விஷால் ரசிகர்கள் ஹாப்பி..!
விஷ்ணு விஷாலின் இயல்பான நடிப்பும், ஐஸ்வர்யாவின் ஆக்ரோஷமான மல்யுத்த காட்சிகளும் பாராட்டப்பட்டன. கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோரின் துணை வேடங்களும் கைதட்டல் பெற்றன. பெண்களின் கனவுகளையும், ஆணாதிக்க கருத்துகளை எதிர்கொள்ளும் வலிமையையும் நகைச்சுவையுடன் எடுத்துரைக்கும் இப்படம், சில பிற்போக்கு வசனங்களுக்காக விமர்சிக்கப்பட்டாலும், பெண்ணியத்தை மையப்படுத்தியதற்காக பாராட்டப்பட்டது. திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளில் 2 கோடி ரூபாய் வசூலித்த இப்படம், 30 கோடி ரூபாயை எட்டியதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். குடும்ப பொழுதுபோக்கு படமாகவும், பெண்களை உயர்த்தும் செய்தியை வழங்கியதாகவும் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.
https://twitter.com/i/status/1962479312663417025
இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘கட்டா குஸ்தி 2’ படத்தை விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது. இந்த அறிவிப்பை ஐசரி கணேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இப்படம் விஷ்ணு விஷாலுடன் இணையும் மூன்று படங்களில் ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார். விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ திரைப்படம் அக்டோபர் 31 அன்று திரைக்கு வர இருக்கிறது. இதை தவிர ‘ஓர் மாம்பழ சீசனில்’, ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உயர்ந்துள்ளது. முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் இதே உற்சாகத்துடன், புதிய கதைக்களத்துடன் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து ‘கட்டா குஸ்தி 2’ எடுக்கவுள்ளனர்.

இந்நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் நகைச்சுவையான புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் கதாநாயகியாக ஐஷ்வர்யா லட்சுமி நடிக்கிறார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் இசையை ஷான் ரோல்டன் மேற் கொள்கிறார்.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா லட்சுமியுடன் சூரி இணைந்து ஆட்டம்..! திருவிழாவை அமர்களப்படுத்திய மாமன் பட ஜோடி..!