தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் (சிம்பு) இணையும் புதிய படமான 'எஸ்டிஆர் 49' படத்தின் ப்ரோமோ குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வட சென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம், வெற்றிமாறனின் முந்தைய படைப்பான 'வட சென்னை' உலகத்துடன் தொடர்புடையதாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், இளமையான கதாபாத்திரத்திற்காக 10 கிலோ எடை குறைத்து தன்னை தயார்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ப்ரோமோ வீடியோவில் சிம்பு கையில் கத்தியுடன் நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இது, அவர் தயாரிக்கும் 47வது திரைப்படமாகும்.
இதையும் படிங்க: இனி என் கம்பெனியில் படம் தயாரிக்க மாட்டோம்.. குண்டை தூக்கிப்போட்ட இயக்குநர் வெற்றிமாறன்..!!
இப்படத்தின் ப்ரோமோ ஷூட் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்காக வளசரவாக்கத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்ததாகவும், வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் உள்ளன. செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://x.com/i/status/1963584041934098891
இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதன்படி, படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டது. தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் வலைத்தளத்தில், "வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள்" என பதிவிட்டு, சிம்பு நடிக்கும் 'STR 49' படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

'வட சென்னை' படத்தின் முதல் பாகத்தில் சிம்பு நடிக்க இருந்தபோது நடிக்க முடியாமல் போன நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ராஜன் வகையரா' என பெயரிடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை படம் ரிலீஸ்.. இன்று மாஸாக வெளியான அனுஷ்காவின் “காட்டி” கிளிம்ப்ஸ் வீடியோ..!!