வெள்ளியைத் தொட்டீங்கன்னா காணாமல் போயிடுவீங்க என்று கூறியிருக்கிறார். தற்போது வெள்ளிவிலை கடுமையான சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. நேற்று முன்தினம் அமெரிக்க வர்த்தகத்தில் வெள்ளி விலை 10 சதவீதம் வரை சரிந்தது. மீண்டும் 2 சதவீதம் வரை உயர்ந்தது. இதனால் எம்சிக்ஸ் சந்தையில் வெள்ளி விலை 2 லட்சத்து 43 ஆயிரத்து 180ஆக உள்ளது. சில்லறை விற்பனை சந்தையில் 1 கிராம்280க்கு வர்த்தகமாகி வந்தது. ஆனால் சில்லறை சந்தையில் வாங்கி வைத்த வெள்ளியை விற்க முயற்சி செய்தவர்களுக்கு தற்போது 2 லட்சத்து 20,000க்கு மேல் விற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனால் 4 லட்சத்துக்கு வாங்கியவர்கள் இப்போது 2லட்சத்து 20 ஆயிரம் முதல் 2லட்சத்து 30 ஆயிரம் வரைக்கே விற்க முடியும் என்று ஆனந்த் சீனிவாசன் கூறியிருக்கிறார். இது வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு பலத்த அடி. வெள்ளி மற்றும் பியூச்சர் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு இடிஎ்களில் முதலீடு செய்தவர்களுக்கும் கூட அதிகப்படியான நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனந்த் சீனிவாசன் பல மாதங்களாகவே வெள்ளி இடிஎஐை தொடாதீங்க என்று எச்சரித்து வருவதாக கூறியிருக்கிறார். ஆனால் பலர் இஸ்டாகராம் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் ஆலோசனைகளை நம்பி வெள்ளியில் முதலீடு செய்து பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்கள் எனவும் விமர்சித்திருக்கிறார். பல பேர் ஏமாந்து போயிட்டாங்க என்று வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஹப்பாடா...! சர்ரென சரிந்த தங்கம் விலை...! மக்கள் சற்று நிம்மதி...!
தமிழ்நாட்டில் திருமணம், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் வெள்ளி நகைகள் அதிகம் வாங்கப்படுகிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் நடுத்தர குடும்பங்கள், கிரெடிட் கார்ட், தவனை முறை, கடன் ஆகியவற்றை பயன்படுத்தி வெள்ளி வாங்கும் வழக்கம் அதிகம். இந்த நிலையில் வெள்ளி விலை கடுமையாக சரிந்ததால், நகைக்கடைக்கு சென்று விற்கும் போது பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக முதலீடு என்ற நோக்கத்தில் வெள்ளி வாங்கியவர்கள் இப்போது பெரும் சிக்கலில் இருக்கின்றனர்.
வெள்ளியை முதலீடாக பார்க்காதீர்கள். அது மிகவும் நிலைத்தன்மையற்றது. கொலுசு வளையல் போன்ற பயன்பாட்டுக்கு மட்டும் வாங்குங்கள் என ஆனந்த் சீனிவாசன் தற்போது கூறி கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் இந்த எச்சரிக்கையை உணர்ந்து செயல்படுவது அவசியம். வெள்ளி எப்போதுமே ஒரு நிலைத்தன்மையற்றது. அதிக ஏற்ற இரக்கம் கொண்டது. அதனால் முதலீட்டுக்கு தங்கத்தை விட வெள்ளி பாதுகாப்பானது கிடையாது என வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: RBI-ன் புதிய கட்டுப்பாடுகள்..!! பங்குச் சந்தை தரகு நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு..!!