தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. 1 கிராம் தங்கம் இப்போது 8,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலையில் தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற கேள்வி தான் இப்போது பலரின் மனதில் இருக்கும் குழப்பம். தங்கம் என்பது எப்போதும் பாதுகாப்பான முதலீடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது விலை அதிகமாக இருப்பதால் இப்போது வாங்குவது சரியா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகத்திற்கு பதிலளிக்க பிரபல பொருளாதார நிபுணர் ராஜேஷ் ஒரு முக்கியமான விளக்கம் அளித்திருக்கிறார்.

கடந்த மே மாதம் 23 ஆம் தேதி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் போட்ட பதிவே தற்பொழுது வைரலாக பரவி வருகிறது. அவர் சொன்னது என்னவென்றால் தங்கம் விலை அதிகமாகிவிட்டால் அதை மக்கள் வாங்க முடியாது. வாங்க முடியாத அளவுக்கு விலை போனால் தேவையும் குறையும். அதாவது தங்கம் விலை எகிறம்போது அதை பணமாக்கும் சக்தி குறைந்து போகிறது என்பது தான் இந்த முக்கியமான எச்சரிக்கை. அதோடு அவர் கூறுவது டிமாண்ட் குறைந்துவிட்டால் சந்தையில் தங்கம் தேங்கி நிற்கும் விற்பனை நடக்காது அப்போ சப்ளை அதிகமாகிவிடும்.

இது தங்கத்தின் விலையை கீழே இழுக்கும் முக்கியமான காரணமாக மாறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுவது விலை குறையுதேன்னு தெரிந்த உடனேயே பலரும் பயந்து போய் தங்கம் வாங்குவார்கள். யாராவது லாபம் பார்த்திருந்தாங்கன்னா ப்ராபிட் புக்கிங் பண்ணுவாங்க. இதனால் விலை குறையும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: வாரத்தின் முதல் நாள் ஹேப்பி நியூஸ்.. தங்கம் வாங்க ரெடியா மக்களே..!
இது ஒரு முக்கியமான புள்ளி. அதாவது விலை ஏறுகிறது என நினைத்து இதுபோல் வாங்கினால் சில வாரங்களில் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. அதாவது நாம் வாங்கியதற்கு பிறகு அதே தங்கத்தை விற்றால் நமக்கே நஷ்டமாகும். முடிவில் பொருளாதார நிபுனர் ராஜேஷ் என்ன சொல்கிறார் என்று பார்த்தால் தங்கம் விலை மிக உயரத்தில் இருக்கும்போது அதை வாங்குவது ரிஸ்கானது எனவும் விலைசற்று நிலை வந்த பிறகு தேவைக்கும் வருமானத்திற்கும் ஏற்ப முதலீடு செய்யலாம் எனவும். அதனால் இப்போது விலை உச்சத்தில் இருக்கும்போது அவசரமாக தங்கம் வாங்க வேண்டாம். சற்று காத்திருந்து சந்தையை பாருங்கள். விலை குறையும் வாய்ப்பு இருந்தால் சற்று பொறுத்திருக்கத்தான் நிபுணர் பரிந்துரை செய்கிறார்.
இதையும் படிங்க: இன்னும் ஒரு வாரத்துல தங்கம் வாங்கிக்கோங்க... உச்சம் தொடப்போகும் தங்கம் விலை - நிபுணர் எச்சரிக்கை!