ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருவது நகை வாங்க காத்திருப்போருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் மாற்றமின்றி கிராம் 8,935 ரூபாய்க்கும், சவரன் 71,480 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம் (29/05/2025):
இன்றைய நிலவரப்படி, (வியாழக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 895 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாரத்தின் முதல் நாள் ஹேப்பி நியூஸ்.. தங்கம் வாங்க ரெடியா மக்களே..!
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 44 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 704 ரூபாய்க்கும், சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 632 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை குறைந்தது போல் வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 10 காசுகள் குறைந்து 110 ரூபாய் 90 காசுகளுக்கும், கிலோவிற்கு ரூ.100 குறைந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.
இதையும் படிங்க: நகை வாங்குற ஆசையே போய்டும்.. ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் தெரியுமா?