• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பெண் ஏடிஜிபிக்கே பாதுகாப்பில்லை...மூடிமறைத்து மவுனமாக்க முயல்வதா...எடப்பாடி, அண்ணாமலை விமர்சனம்

    தமிழகத்தில் பெண் ஏடிஜிபி கே பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
    Author By Kathir Mon, 03 Feb 2025 13:41:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    edappadi-annamalai-condeemns-that-no-safety-for-women-a

    பெண் ஏடிஜிபிக்கே பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது, காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. இதையெல்லாம் மறைத்து உண்மைகளை மவுனமாக்கும் வேலையை காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் செய்கிறார் என எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளனர். 

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில், ”ஒரு பெண் ஏடிஜிபி  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    #ADGP

    "சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்" என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது. தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது , இந்த செயலுக்கு  ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?

    இதையும் படிங்க: சீமானுக்கு என்ன ஆனது?...திராவிட எதிர்ப்பும், பெரியார் எதிர்ப்பும் ஒன்றா?...சரியான பாதையில் பயணிக்கிறாரா?

    தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?  இந்த சூழல் இருக்கும் ஆட்சியில்,  மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, ஸ்டாலின், தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி.

    இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும்.

    உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களின்  குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.  என்று தெரிவித்துள்ள அவர், ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி குறித்தும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

    #ADGP

    என்ன தான் நடக்கிறது இந்த ஸ்டாலின் ஆட்சியில்?  ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா?  நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, "சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன்" என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா?

    "காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை" என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கைப் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்ட ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

    இதேபோல் அண்ணாமலையும் ”விதிமீறலும், சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை.  காவல்துறை துணை ஆய்வாளர்கள் நியமனத்தில், தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள் சுட்டிக்காட்டியதற்குப் பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது. 

    மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் அலுவலகத்தில் இருந்திருந்தால், அவர் உயிரையும் இழந்திருக்க நேர்ந்திருக்கும். இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை தமிழகக் காவல்துறை புறக்கணித்ததாகத் தெரிகிறது. ஏன்?

    காவல்துறை உயர் அதிகாரிகள் இதை மின்சாரப் பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க முயன்றாலும், தீ விபத்துக்கு முந்தைய நிகழ்வுகள், காவல்துறையின் இந்தக் கூற்றை நம்பமுடியாததாக ஆக்குகிறது. ஏனெனில்,  ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள்,  முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதோடு, துணை ஆய்வாளர்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு அவரது ஒப்புதலும் பெறப்படவில்லை.

    தமிழ்நாட்டில் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, தமிழகத்தில் பாதுகாப்பாக உணரவில்லை.

    தமிழக முதல்வர் ஸ்டாலின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏடிஜிபி அந்த்ஸ்த்தில் உள்ள பெண் உயர் அதிகாரிக்கு பாதுகாப்பில்லை என்கிற விஷயம் டெல்லி உள்துறை அமைச்சகம் வரை தமிழகத்தின் செயலின்மையை எடுத்து காட்டுவதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டாக உள்ளது

    இதையும் படிங்க: சோனியா காந்தி மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு: குடியரசுத் தலைவர் குறித்த பேச்சால் சிக்கல்

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share