• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    திமுக அரசின் காவல் துறையைக் கண்டித்து வரும் 21ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    Author By Raja Mon, 19 May 2025 22:43:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi Palaniswami has announced that a protest will be held to condemn the police department

    அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர், இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால் அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக 'சார்'களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    அரக்கோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை, ஏற்கெனவே வேறு பெண்ணுடன் திருமணமாகி வாழ்ந்து வரும் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் R. தெய்வச்செயல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அந்த மாணவியை பின்தொடர்ந்தும், கைபேசி வாயிலாகவும் காதலிப்பதாகத் தொடர்ந்து வற்புறுத்தியும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தொடர்ந்து டார்ச்சர் செய்தும் மிரட்டிய நிலையில் 'எனக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது' என்று தெரிவித்த நிலையிலும், தொடர்ந்து திமுக நிர்வாகி தெய்வச்செயல் வலுக்கட்டாயமாக அந்த மாணவியை கடத்திச் சென்று தனது உறவினர்களுடன் சோளிங்கர் அருகில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டு, பல முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கல்லூரி மாணவியை தனது மனைவி என்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    ADMK

    இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மேலும் ஒரு பெண், கல்லூரி மாணவியிடம் ஏற்கெனவே ஐந்து வருடத்திற்கு முன்பு திமுக நிர்வாகி தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு தவறாகப் பயன்படுத்துவதாகவும், மேலும், இந்த திமுக நிர்வாகி இதுபோல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ள விபரத்தையும் தெரிவித்துள்ளார். எனவே, கல்லூரி மாணவி, திமுக நிர்வாகி தெய்வச்செயல், ஏற்கெனவே பலருடன் திருமணம் செய்துகொண்ட நிலையில், தன்னையும் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், தவறான வழியில் ஈடுபடுத்த துன்புறுத்துவதாகவும், உரிய ஆதாரங்களுடன் காவல் துறையில் புகார் அளித்தும், காவல்துறை FIR பதிவு செய்ய மறுத்ததாகவும், கடும் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறை, தான் கூறிய முழு விபரங்களையும் FIR-ல் குறிப்பிடாமல் பதிவு செய்ததால், அறிக்கையை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: இரையாக்கப்படும் இளம்பெண்கள்.. ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! "டம்மி அப்பா" - ஸ்டாலினை வெளுத்த இபிஎஸ்!

    ADMK

    இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவியின் பேட்டியை அனைத்து ஊடகங்களும், நாளிதழ்களும் விரிவாக வெளியிட்டுள்ளன. திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற 'சார்'களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கல்லூரி மாணவியின் புகாருக்கு உரிய நேரத்தில் முழு விபரங்களையும் FIR-ல் பதிவு செய்யாமல் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையைக் கண்டித்தும்; தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்காத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 21.5.2025 - புதன் கிழமை காலை 9.30 மணியளவில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    ADMK

    மேலும், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், நகர, பேரூராட்சி மன்றங்களின் இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பொறியில் சிக்கிய எலியாக அமைச்சர் அன்பில் மகேஸ்.. ஹெச்.ராஜாவின் பகீர் குற்றச்சாட்டு.!!

    மேலும் படிங்க
    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்
    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்
    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    தமிழ்நாடு
    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்
    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்

    செய்திகள்

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்
    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share