• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

    அமெரிக்காவின் மியாமியில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
    Author By Thenmozhi Kumar Mon, 07 Sep 2026 07:58:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Miami Cargo Plane Crash: Aircraft Veers Off Runway and Slams into Road Vehicles; 5 Dead.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற மியாமி சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கிய அமேசான் நிறுவனத்தின் பிரைம் ஏர் போயிங் 767 சரக்கு விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகி, விமான நிலைய எல்லைச் சுவரைத் தாண்டி அருகிலிருந்த சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    போர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரிலிருந்து மியாமிக்கு சரக்குகளை ஏற்றி வந்த '21 ஏர் ஃபைட் 7598' (Amazon Prime Air Boeing 767-300) சரக்கு விமானம், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் தரையிறங்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையை விட்டு விலகி (Runway Overrun), அசுர வேகத்தில் முன்னேறி விமான நிலைய எல்லைக்கு வெளியே இருந்த பிரதான சாலையைக் கடந்து வாகனங்கள் மீது மோதியது.

    America

    அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றும் சாலையில் சென்றுகொண்டிருந்த கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது விமானம் மோதி நசுக்கிய கையோடு, விமானத்தின் எரிபொருள் கசிவு ஏற்பட்டு அடுத்த சில விநாடிகளில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. வானுயரத்திற்கு எழுந்த கரும்புகையும் பயங்கர தீப்பிழம்புகளும் அப்பகுதி முழுவதையும் சூழ்ந்தன. இக்கோர விபத்தில் வாகனங்களுக்குள் சிக்கியவர்கள் மற்றும் பாதசாரிகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்; அவர்களில் 3 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: அமெரிக்க பாஸ்போர்ட் பெறும் குழந்தைகளுக்கு புதிய விதி.. இனி இது கட்டாயம் தேவையாம்..!!

    விபத்து குறித்துத் தகவலறிந்து 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தன. விமானத்தின் விமானிகள் உள்ளிட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, மியாமி சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு விமானப் போக்குவரத்துகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) மற்றும் தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) ஆகியவை உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளன.

    இதையும் படிங்க: மீண்டும் மத்திய கிழக்கைச் சூழ்ந்த போர் மேகம்... வானிலிருந்து பொழியும் குண்டு மழை... அமெரிக்கா - ஈரான் இடையே சரமாரி தாக்குதல்...!!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share