• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகை நக்மாவும்... 4 காதலர்களும்... நுகர நுகர வாசனை... 50 வயதில் தனிமையில் யோசனை..!

    இன்று தனது 50 வது பிறந்த நாளை எட்டி இருக்கும் நக்மா திரையுலகில் இருந்து விலகி இருக்கிறார். குடும்பத்தில் இருந்து தனித்து இருக்கிறார்.
    Author By Thiraviaraj Wed, 25 Dec 2024 09:52:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Birthday Special Nagma affair Sourav Ganguly bollywood south bhojpuri

    மிக அழகான, படுகவர்ச்சியான நடிகை நக்மா. 1990 ஆம் ஆண்டு  'பாகி' படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார் நக்மா. முதல் படத்திலேயே ஜோடியாக சூப்பர் ஸ்டார் சல்மான் கான். படம் தோல்வி. அடுத்து அக்‌ஷய் குமாருடன் 1994ல் 'சுஹாக்', இதுதான் நக்மாவின் முதல் வெற்றிப் படம் ஷாருக்கானுடன் 'கிங் அங்கிள்' போன்ற வெற்றிப் படத்திலும் நடித்தார் நக்மா. தமிழ், தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார்களான ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற ஜாம்பவான்களுடன் ஜோடி போட்டவர். போஜ்புரி திரையுலகில், ரவி கிஷன், மனோஜ் திவாரியுடன் நக்மா ஹிட்டடித்த படங்கள் ஏராளம்.Birth day

    நக்மா சினிமாவுக்குள் நுழைய முடிவெடுத்தது அவர் அம்மாவின் கணவர் சினிமா தயாரிப்பாளராக இருந்த போது தான். அதாவது இரண்டாவது தந்தை. நக்மாவின் இயற்பெயர் நந்திதா மொரார்ஜி. 25 டிசம்பர் 1974 அன்று மும்பையில் பிறந்தார். இவரது தந்தை அர்விந்த் மொரார்ஜி குஜராத்தில் பெரிய தொழிலதிபர். ஷாமா காஸி என்கிற இஸ்லாமியப்பெண்ணான நக்மாவின் அம்மா ஸீமா என்கிற ஹிந்துவாக மாறி அர்விந்த் மொரார்ஜியை மணந்தார். நக்மா பிறக்க இருவரும் பிரிந்தனர். பின் ஸீமா சந்தர் சதானாவை மணந்தார். மூன்று குழந்தைகள். ஜோதிகா, ராதிகா, ஒரு மகன். சூரஜ் சதானா. நக்மா மும்பை பல்கலைக்கழகத்தின் தேசிய கல்லூரியில் வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர்.

    தயாரிப்பாளரான இரண்டாவது தந்தை சந்தர் சதானாவின் செல்வாக்கால் நக்மாவுக்கு முதல் படமே சல்மான் கானுடன்.  Baagi என்கிற அப்படம் வெற்றிப்படம் தான். வெற்றிக்கு நம்ம இளையராஜாவும் ஒரு காரணம். ராஜாவின் 'ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா'  பாடலையும், 'கேளடி கண்மணி பாடகன் சங்கதி' பாட்டையும் கொத்தா தூக்கிட்டு போய் வச்சிட்டாங்க. பாடல் தான் அப்படின்னா கதையும் காப்பி. நாயகியை வெளியில் ஒரு இடத்தில் சந்திப்பான் நாயகன். விரும்புவான். பின் அவரவர் வழியில் போவார்கள். 

    இதையும் படிங்க: செதுக்கி வச்ச சிலை! சேலையில் சூடேற்றும் 23 வயசு இளம் சிட்டு; ஸ்ரீலீலா போட்டோஸ்!

    ஒரு நாள் நண்பர்களோடு விருப்பமேயில்லாமல் விபச்சார விடுதிக்கு செல்லும்(இதையே எத்தனை படத்தில் உருட்டுவார்களோ?) நாயகன் அங்கு அடைபட்டிருக்கும் நக்மாவை வர்ஜினிட்டியோடு கொண்டு வந்து விடுவான். மாமா வில்லன்கள் துரத்த மீதிக்கதை.Birth day

    அடுத்த படமே ஆந்திராவுக்கு வந்து விட்டார் நக்மா. சிரஞ்சீவியோடு அவர் நடித்த கரணமொகுடு(தமிழில் மன்னன்) டூப்பர் ஹிட். அதை வாங்கி மலையாள டப் செய்து 'ஏய் ஹீரோ' என வெளியிட்ட கேரள வினியோகஸ்தர் கோடீஸ்வரரானார். நாகார்ஜுனா, சிரஞ்சீவியோடு கெட்ட ஆட்டம் போட்ட அவரை தன் தலையில் சுமந்து வந்தார் ஜென்டில்மேன் சங்கர்.

    ஆமாம். சங்கரும், குஞ்மோனும் நடிகையாக கொண்டு வரவில்லை. ஏதோ தேவலோகத்திலிருந்து தேவகன்னிகைகளில் ஒருவரை நாயகியாக்கி கொண்டு வந்திருப்பது போல தாங்கினார்கள். காதலன் பூஜையில் நக்மாவையே பார்த்துக் கொண்டிருந்த நடிகர்கள் பல. சத்யராஜெல்லாம் ஓப்பன் ஜொள்ளுவிட்டு நக்மாவுக்காக ஜொள் ஸ்டேட்மெண்ட்டெல்லாம் பகுத்தறிவோடு விட்டார். வில்லாதிவில்லன் என்கிற அய்யர் படமெல்லாம் இயக்கினார். 

    நக்மாவும் அப்படித்தான் இருந்தார். காதலன் படத்தின் ஒவ்வொரு அசைவும் தமிழ் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. சங்கர் குழந்தையை போல் தூளியிலெல்லாம் தூங்க வைத்தார். கோழிக்குஞ்சுகள் கூட நக்மாவைப் பார்த்து கோபாலா கோபாலா எனப்பேசின என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நக்மா சப்பிப்போட்ட குச்சி மிட்டாயியின் குச்சியை சேகரித்து வைத்து பிரபுதேவா காதலுக்கு சுத்தம், பத்தம் கிடையாது என்றார். படம் டூப்பர் ஹிட்.Birth day

    அடுத்து வந்த பாட்சா. ரஜினியோடு நக்மா ஜோடி செம கும்பகோணம் டிகிரி காபி காம்பினேஷன். நுகர நுகர வாசனை. ஸ்டைலு ஸ்டைலு தான் பாடலெல்லாம் தியேட்டரில் விசில் பறந்தது. நீ நடந்தால் நடையழகு பாடலெல்லாம் ஒரு அழகான நடிகை பாடுவதால் மிக மிக அழகு. ரஜினியே நக்மாவைப்பார்த்து 'நான் ஆசையை வென்ற ஒரு புத்தனுமில்லை' என்றார். செம பாட்டு. தங்க மகளென்று சிங்க நடை போட்டு அருகில்அருகில் வந்தாள்.

    தன் உள்ளத்தை அள்ளித்தா படத்துக்கு நக்மா தான் வேணும் என அடம் பிடித்த சுந்தர்.சிக்கு தயாரிப்பாளர் இலுப்பைப்பூ ரம்பாவை தான் தந்தார். ஆனாலும் சுந்தர்.சி விடாமல் மேட்டுக்குடி, ஜானகிராமன் என நக்மாவை நாயகியாக இயக்கி ஜென்ம சாபல்யம் அடைந்தார்.

    சரத்குமாருக்கு ஒரு நக்மா கனவு இருந்தது. அந்த கனவை நனவாக்க பல கோடிகளில் ஸ்விட்சர்லாந்தின் மலை கிராமங்களில் நக்மாவை ஹயபூஸா பில்லியனில் இருத்தி 'மயில் தோகை அழைத்தால் மனம் உன்னை விரும்பும்' என லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் பாடல் ஒலிக்க ஹெலிகாப்டரில் ஷுட் செய்து பறந்தார். 'ரகசிய போலீஸ்'......நனவானது. ஆனால் நக்மாவின் கன்டிஷன்களை ஏற்காததோடு, சரத்தின் கடன்களை பார்த்து நக்மாவே விலகினார்.

    இது வரை சுகமாக போனது. நாகார்ஜுனாவோடு தெலுங்கில் நடித்த கில்லர், கிரிமினல் டப்பிங் படங்களின் தோல்வியால் நக்மா க்ரேஸ் முடிவுக்கு வந்தது. கொஞ்ச நஞ்சம் இருந்த க்ரேஸையும் பாக்யராஜ் வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் ஜோடியாக்கி காலி செய்தார். 

    அரவிந்தன், வேட்டிய மடிச்சுக்கட்டு தோல்வியால் தீனா படத்தில் ஒரு பாடலுக்கு நடித்தார் நக்மா. வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடலுக்கு நக்மா ஆட காரணம் அஜித்தோடு சிட்டிசன் பட வாய்ப்பு தான். மிகப்பெரிய கம்பேக் எதிர்பார்த்திருந்த நக்மாவுக்கு வாய்ப்பு அஜித்தோடு என்கிற போது அதையே முழுதாக நம்பி இருந்தார். சிட்டிசன் படத்தில் நக்மாவுக்கு சிபிஐ ஆபிசர் ரோல். செம கம்பீரமான இன்வெஸ்டிகேடிங் ஆபிஸர் பாத்திரம். நக்மாவுக்கு சரியான குரலை அது வரை தந்திருந்தவர் நடிகை சரிதா. அந்த குரல் காதலன் முதலே அழகாக இருந்தது.

    ஆனால் இயக்குனர் சரவண சுப்பையா நாற்பது வயதுக்கு மேலான சிபிஐ ஆபிஸர் குரல் கம்பீரமாக இருக்க வேண்டும் என ஒரு குரலை தேர்ந்தெடுத்தார். அந்த குரல் ஒரு கவர்ச்சி நடிகையுடையது. அவரும் கம்பீரமாக பேசினார். 

    படம் ரிலீசானது. குரல் படத்தில் ஆண் குரலைப் போல் ஒலித்ததாக பலரும் விமர்சித்தனர். சுத்தமாக எடுபடாமல் மட்டுமல்ல... நக்மா மேலிருந்த காதலன் அழகி இமேஜும் காணாமல் போனது. அது வரை சேர்த்து வைத்திருந்த நாயகி இமேஜும் தகர்ந்து மும்பைக்கு பெட்டியைக் கட்டிக்கொண்டு போனார் நக்மா. போஜ்புரி படங்களில் ஹிட்டானது தனிக்கதை.

    நக்மாவும், சவுரவ் கங்குலியும் 1999 உலகக் கோப்பை போட்டியின் போது சந்தித்தபோது பற்றிக் கொண்டது காதல் தீ. குடும்பம் மறந்து நக்மாவோடு பப்ளிக்காகவே ஊர் சுற்றினார் கங்குலி.  சௌரவ் உடன் உறவில் இருப்பதை நக்மாவே பல முறை ஒப்புக்கொண்டுள்ளார். நக்மாவுக்காக கங்குலி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பினார்.  நக்மாவுக்கு இதில் விருப்பம் இல்லை.Birth day

    காதல், திருமணம் என்று மனம் அலைபாய்ந்ததால், கங்குலியால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்ததாக நக்மா கூறியிருந்தார். போஜ்புரி நடிகர் ரவி கிஷனுடன் நக்மா இணைத்துப் பேசப்பட்டார். ஆனால் நக்மா சவுரவ் கங்குலியுடனான தனது உறவை மட்டுமே ஏற்றுக்கொண்டார். இன்று அவர் தனிமையில் வாழ்கிறார். அரசியலில் ஆர்வம் கொண்ட நக்மா, 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.

    இன்று தனது 50 வது பிறந்த நாளை எட்டி இருக்கும் நக்மா திரையுலகில் இருந்து விலகி இருக்கிறார். குடும்பத்தில் இருந்து தனித்து இருக்கிறார். 

    இதையும் படிங்க: சினிமா டிக்கெட் விலை உயருமா ..? திருப்பூர் சுப்ரமணியம் சொன்ன முக்கிய தகவல் ..!

    மேலும் படிங்க
    இந்தியாவுக்கு எதிராக போரா..? ராணுவத்துக்கு எதிராக திரளும் 2 கோடி பாக்., மக்கள்..!

    இந்தியாவுக்கு எதிராக போரா..? ராணுவத்துக்கு எதிராக திரளும் 2 கோடி பாக்., மக்கள்..!

    உலகம்
    இந்தியா-பாக்., மோதலில் பல்லிளித்த சீன ஆயுதங்கள்... இதுதான் லட்சணம்.. கைகொட்டி சிரிக்கும் உலக நாடுகள்..!

    இந்தியா-பாக்., மோதலில் பல்லிளித்த சீன ஆயுதங்கள்... இதுதான் லட்சணம்.. கைகொட்டி சிரிக்கும் உலக நாடுகள்..!

    உலகம்
    3 மணி நேரத்தில் கனமழை; 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. ஷாக் கொடுத்த வானிலை மையம்!!

    3 மணி நேரத்தில் கனமழை; 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. ஷாக் கொடுத்த வானிலை மையம்!!

    தமிழ்நாடு
    ரிலீசானது சந்தானத்தின் DD Next Level பட கதாபாத்திர போஸ்டர்..! கொண்டாடி வரும் ரசிகர்கள்..!

    ரிலீசானது சந்தானத்தின் DD Next Level பட கதாபாத்திர போஸ்டர்..! கொண்டாடி வரும் ரசிகர்கள்..!

    சினிமா
    பாகிஸ்தானுக்கு சப்போர்ட்டா? 10 நிமிடம் நையப்புடைத்த போலீசார்.. அரை நிர்வாணமாக்கி ரோட்டில் ஊர்வலம்..!

    பாகிஸ்தானுக்கு சப்போர்ட்டா? 10 நிமிடம் நையப்புடைத்த போலீசார்.. அரை நிர்வாணமாக்கி ரோட்டில் ஊர்வலம்..!

    இந்தியா
    20% பாக். விமானப்படை தளம் காலி... தாக்குதல் பற்றி விளக்கமளித்த இந்திய  விமானப்படை!!

    20% பாக். விமானப்படை தளம் காலி... தாக்குதல் பற்றி விளக்கமளித்த இந்திய விமானப்படை!!

    இந்தியா

    செய்திகள்

    இந்தியாவுக்கு எதிராக போரா..? ராணுவத்துக்கு எதிராக திரளும் 2 கோடி பாக்., மக்கள்..!

    இந்தியாவுக்கு எதிராக போரா..? ராணுவத்துக்கு எதிராக திரளும் 2 கோடி பாக்., மக்கள்..!

    உலகம்
    இந்தியா-பாக்., மோதலில் பல்லிளித்த சீன ஆயுதங்கள்... இதுதான் லட்சணம்.. கைகொட்டி சிரிக்கும் உலக நாடுகள்..!

    இந்தியா-பாக்., மோதலில் பல்லிளித்த சீன ஆயுதங்கள்... இதுதான் லட்சணம்.. கைகொட்டி சிரிக்கும் உலக நாடுகள்..!

    உலகம்
    3 மணி நேரத்தில் கனமழை; 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. ஷாக் கொடுத்த வானிலை மையம்!!

    3 மணி நேரத்தில் கனமழை; 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. ஷாக் கொடுத்த வானிலை மையம்!!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானுக்கு சப்போர்ட்டா? 10 நிமிடம் நையப்புடைத்த போலீசார்.. அரை நிர்வாணமாக்கி ரோட்டில் ஊர்வலம்..!

    பாகிஸ்தானுக்கு சப்போர்ட்டா? 10 நிமிடம் நையப்புடைத்த போலீசார்.. அரை நிர்வாணமாக்கி ரோட்டில் ஊர்வலம்..!

    இந்தியா
    20% பாக். விமானப்படை தளம் காலி... தாக்குதல் பற்றி விளக்கமளித்த இந்திய  விமானப்படை!!

    20% பாக். விமானப்படை தளம் காலி... தாக்குதல் பற்றி விளக்கமளித்த இந்திய விமானப்படை!!

    இந்தியா
    துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஜோடி.. சிசிடிவியில் சிக்கிய காட்சி... பின்னணியில் சதிதிட்டமா?

    துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஜோடி.. சிசிடிவியில் சிக்கிய காட்சி... பின்னணியில் சதிதிட்டமா?

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share