• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    காசாவைக் கைப்பற்றுவோம்..! பாலஸ்தீனியர்களை விரட்டுவோம்..! அதிபர் டிரம்ப் அதிரடி 

    பாலஸ்தீனத்தின் காசா நகரைக் கைப்பற்றுவோம்: டிரம்ப் அதிரடி
    Author By Pothyraj Wed, 05 Feb 2025 11:52:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    we-will-drive-out-palestine-from-gaza-trump

    பாலஸ்தீனத்தின் காசா நகரைக் கைப்பற்றுவோம், அங்கிருக்கும் பாலஸ்தீனியர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார். அவருடனான சந்திப்புக்குப்பின் இந்த அதிரடியான அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடிப் பேச்சும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.

    Gaza war
    அது மட்டுமல்லாமல் காசாவைக் கைப்பற்றியபின் அங்கிருக்கும் பாலஸ்தீனிய மக்களை போர் நடக்கும் பகுதியிலிருந்து மத்திக கிழக்கு நாடுகளுகான எகிப்து, ஜோர்டான் நாடுகளுக்கு அனுப்புவோம் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால், ஜோர்டான், எகிப்து நாடுகள் இந்த அறிவிப்பு வெளியானதும் இதை நிராகரித்துள்ளன.
    பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் மூண்டது,  இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் ஏராளமானோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
    பதில் நடவடிக்கையில் இறங்கிய இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குதல் நடத்தியது. இரு தரப்புக்கும் இடையிலான சண்டை கடந்த 15 மாதங்களாக நடந்து வருகிறது. இதுவரை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 46 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர், 1600 இஸ்ரேல் ராணுவத்தினர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் காசாவிலிருந்து வெளியேறி வெவ்வேறு நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.
    இதனிடையே காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே அமைதிப் பேச்சு நடந்து, போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தது. இதன்படி, இருதரப்பும் கைதிகளை ஒப்படைத்து வருகிறார்கள்.

    Gaza war

    இந்த சூழலில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு பயணித்தார். அங்கு 2வதுமுறையாக அதிபராக பதவி ஏற்றுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து, அதிபர் நெதன்யாகு பேசினார். இரு தலைவர்களுக்கும் நீண்டநேரம் ஆலோசித்த நிலையில் கூட்டாக இருவரும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர்.
    அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது:
    பாலஸ்தீனத்தின் காசா நகரை அமெரிக்கா கைப்பற்றும், அங்குதேவையான அனைத்துப் பணிகளையும் செய்து, அதை சொந்தமாக்கிக்கொள்ளும். காசாவில் இருக்கும் வெடிக்காத வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தி, சேதமடைந்த கட்டிடங்களை சரி செய்வோம். அங்கு பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தி, தேவையான வேலைவாய்ப்புகளை, மக்களுக்கு தேவையான வீடுகளை வழங்குவோம். இது இங்கு வரும் பாலஸ்தீனியர்களுக்கு அல்ல. பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பிவைப்போம்.

    இதையும் படிங்க: 46 ஆயிரம் பேரை பலி கொண்ட 'காசா போர்' முடிவுக்கு வந்தது: ஹமாஸ் சமரச ஒப்பந்தத்தை ஏற்றது, இஸ்ரேல்!

    Gaza war
    உண்மையிலேயே அங்கே போராடி வாழ்ந்து, இறந்து, அங்கே ஒரு பரிதாபகரமான வாழ்க்கையை வாழ்ந்த அதே மக்களால் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு ஆக்கிரமிக்கப்படும் ஒரு செயல்முறையை அது மேற்கொள்ளக்கூடாது. காசாவில் வாழும் 20 லட்சம் மக்கள் மனித நேய மனநிலை கொண்ட வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும். இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.
    இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில் “ அமெரிக்க அதிபரிந் திட்டம், காசாவின் வரலாற்றை மாற்றும், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்” எனத் தெரிவித்தார்
    அதேசமயம், ஐ.நா.வுக்கான பாலஸ்தீனத்தின் தூதர், பாலஸ்தீன மக்களின் விருப்பத்துக்கு இந்த உலகம் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிபர் ட்ரம்ப் அளித்த ஆலோசனைகளை எகிப்து, ஜோர்டான் நாடுகளும் நிராகரித்துள்ளன.
    இதற்கிடையே ஹமாஸ், இஸ்ரேல் இடையே 2வது கட்ட அமைதி ஒப்பந்தத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் பேச்சு வார்த்தையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: இந்தியர்களை ஏற்றிக் கிளம்பிய விமானம்… அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக குடியேறியவர்களுக்கு கல்தா!

    மேலும் படிங்க
    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    உலகம்
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்

    செய்திகள்

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share