சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை ரயில் பயணிகள் மூன்று பேர், பிஹார் மாநிலத்தில் இருந்து வந்த ரயிலில் வந்து இறங்கி உள்ளனர். அவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால், அந்த 3 பேரையும் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் பிடித்து விசாரித்து உள்ளனர். விசாரணையில் அவர்கள் சிறார்களை அவர்களது குடும்பத்தினருக்கு சிறு தொகை கொடுத்து அழைத்து வந்து, தமிழகத்தில் கொத்தடிமைகளாக வேலைக்கு சேர்த்து விடும் கும்பல் என தெரிந்தது.

பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில்வே இருப்புப் பாதை காவல்துறை கண்காணிப்பாளர் கர்ணன் தலைமையில், சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் இருப்புப் பாதை கோவிந்தராஜ் முன்னிலையில், சிசிடிவி காட்சிகளுடன் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர்கள் தற்போது 9 சிறுவர்களை சென்னையில் கொத்தடிமைகளாக விற்க அழைத்து வந்திருப்பதும் தெரிந்தது. உடனே சென்னை சென்ட்ரல் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் இணைந்தபடி ரயில் நிலையத்தில் சிறார்களை தேடினர்.
இதையும் படிங்க: அதிமுக-பாமக- பாஜக என நாங்க எல்லாரும் கூட்டணிங்க..! தீர்க்கமாகச் சொல்லும் திண்டுக்கல் சீனிவாசன்..!

தர்கர்கள் அளித்த தகவலின் படி, ரயிலில் விட்டு 9 சிறார்கள் கீழே இறக்கியதும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் சிறார்களை மீட்டெடுத்தனர். பின்னர் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் தரகர்களாக செயல்பட்ட மூவரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து தங்களது பாணியில் விசாரித்தனர். அப்போது தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் பல கடைகளிலும் மேலும் கட்டிடத் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக, வேலைக்கு பீகார் மாநிலம் உத்தர பிரதேஷம், உத்தரகாண்ட் ஆகிய பல மாநிலங்கள் சேர்ந்து சிறுவர்களை அவர்களை பெற்றோரிடம் சிறு தொகை கொடுத்து வேலைக்காக அழைத்து வந்தது தெரிந்தது.

சிறுவர்கள் வேலை செய்ய உள்ள முதலாளியிடம் விற்றுவிட்டு பெரிய தொகை பெற்று விடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக பணியில் அமர்த்தப்படும் சிறார்கள் கொத்தடிமைகளாக பயன்படுத்தலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே பாதை போலீசார் மூவரின் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்தர் டிராவத் வ.து50/ த/பெ காயா ராவத், அதே ஊரைசேர்ந்த அஜய்குமார் வ/து 28, த/து அமலா சிங், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ் ராஜ் பால் வ/து 21, த/பெ.மோடிச்சந்த் என தெரிந்தது. இவர்கள் மூவரும் தொடர்ந்து இதே தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எந்தெந்த மாநிலத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறதோ அந்தந்த மாநிலத்திற்கு சிறார்களை அனுப்பி வைப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னைக்கு இவர்களை வரவைத்தது யார்? தரகர்கள் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூவரிடமும் தொடர் விசாரணை நிறைவடைந்த பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்க உள்ளனர். மேலும் ஒன்பது சிறார்களையும், காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சென்னை ராயபுரம் அமைந்துள்ள அரசு தங்கும் விடுதியில் அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய்க்கு புது தலைவலி... தவெக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த சிக்கல்...!