மத்திய பிரதேசத்தில் வரதட்சனை கேட்டு கொடூரமான முறையில் மனைவியை கணவன் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மூடித்தனமாக கணவன் தன்னை அடித்ததாகவும் சமையலறைக்கு இழுத்துச் சென்று கை கால்களை கட்டி சூடு போட்டதாகவும் தெரிவித்தது பதற வைக்கிறது.
மத்திய பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தை சேர்ந்த குஷ்பூ பிப்ளியா என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வரதட்சணை கொடுமையால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தனது கணவன் திருமணம் நடந்த நாளில் இருந்தே தன்னை துன்புறுத்தி வந்ததாகவும் குடிபோதையில் கண்மூடித்தனமாக தன்னை அடித்ததாகவும் கூறி உள்ளார். வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியாக கூறிய அந்தப் பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தன்னை சமையலறை இழுத்துச் சென்று கை கால்களை கட்டி போட்டதாக தெரிவித்தார். பிறகு சூடான கத்தியால் மார்பு கைகள் கால்களை கடுமையாக சூடு போட்டு தாக்கியதாகவும் வலியால் அலறிய போது கொதிக்கும் கத்தியை தன் வாயில் வைத்து துன்புறுத்தியதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதையும் படிங்க: உ.பி.யில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. ஊசிப்போட்டு வன்கொடுமை செய்யப்பட்ட பயங்கரம்..!
தனது பெற்றோர் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாகவும் தனக்கு உன்னை பிடிக்கவில்லை என்றும் கூறி தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்தபோது வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இருந்ததாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக வேறு ஒருவரின் செல்போனிலிருந்து பெற்றோருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில், வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமையால் பறிபோன உயிர்.. ரிதன்யாவின் தந்தை பரபரப்பு புகார்..!!