ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் பெண் விஆர்ஓ வீட்டிற்கு சென்ற தாசில்தார்நிர்வாணமாக நின்று தனது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை மண்டலம் வகாடு தாசில்தாராக ( எம்.ஆர்.ஓ. ) பணிபுரியும் ராமையா, இதற்கு முன்பு பெல்லக்கூர் தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். அப்போது பெல்லக்கூர் விஆர்ஓவாக ( கிராம வருவாய் அதிகாரி ) பணிபுரியும் ஒரு பெண் விஆர்ஓ மீது அவருக்கு பாலியியல் இச்சை ஏற்பட்டது. இதனால் பெண் வி.ஆர்.ஓ.வை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
இந்நிலையில் ராமையா பின்னர் வகாடுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் பெண் வி.ஆர்.ஓ. மொபைல் போனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி நிர்வாண அழைப்புகள் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் உன் வீட்டிற்கு வந்தால் சிக்கன் சமைப்பாயா? நான் கேட்டதை தருவாயா?" என்று மொபைல் போனில் அனுப்பியது மட்டுமல்லாமல், புதன்கிழமை இரவு அவரது வீட்டிற்குச் சென்று நிர்வாணமாக நின்ற நிலையில் விஆர்ஓவை துன்புறுத்தியதாக விஆர்ஓ குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: எங்கடா கை வெக்குற நாயே..! பேருந்தில் சில்மிஷம் செய்தவனை புரட்டி எடுத்த பெண்..!
ஏற்கனவே பெண் விஆர்ஓ இந்த விஷயத்தை தனது தாயிடம் முன்கூட்டியே கூறியிருந்தார். இதனால் தாசில்தார் ராமையா தனது அறைக்குள் வந்து ஆடைகளை கழற்றியபோது, அவர் தனது தாயை அழைத்தார். இதனால், வி.ஆர்.ஓ. தாய் தாசில்தார் ராமையாவை துடைப்பத்தால் தாக்கினார். இதனை எதிர்பாராத தாசில்தார் நிர்வாணமாக இருந்தவர் உடனடியாக தனது ஆடைகளை அணிந்துகொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்த பரபரப்பை ஏற்படுத்தியது, நிர்வாணமாக இருந்த தாசில்தார் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலகி உள்ளது.
இந்நிலையில் தாசில்தார் ராமையாவின் இதற்கு முன்பு பெல்லக்கூர் தாசில்தாராகப் பணியாற்றியபோது, அவருக்கும் பெண் வி.ஆர்.ஓவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த அறிமுகம் இருவருக்கும் இடையே திருமணத்திற்குப் புறம்பான உறவாக மாறியது. ராமையாவின் தாய் வீட்டில் இல்லாதபோது பல முறை அவர்களது வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ராமையா அங்கிருந்து வகாடுக்கு மாற்றப்பட்ட பிறகும் இருவருக்கும் இடையேயான பாலியல் உறவு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தனது மீது மோகம் கொண்ட தாசில்தார் ராமையாவை பெண் வி.ஆர்.ஓ. தனது வீட்டிற்கு வரவழைத்துத் தாக்கியதாக ராமையா தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் தீவிரமாக எடுத்து கொண்டு அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆரம்பாக்கம் சிறுமி வழக்கில் சிக்கிய பாலியல் கொடூரன்... விடிய விடிய நடந்த விசாரணை - அடுத்தது என்ன?