தமிழகத்தில், குறிப்பாக திருப்பூரில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுபோல் நாமும் பிழைத்துக் கொள்ளலாம் என்னும் நோக்கில் ஒடிசாவில் இருந்து கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு குடும்பத்தினர் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ளனர். கோவையில் தங்கி வேலை பார்த்த நிலையில் வேலையில் திருப்தி இல்லாமல் மீண்டும் ஒடிசாவுக்கே சென்றுவிட தீர்மானித்திருந்தனர். ரயிலுக்காக திருப்பூர் ரயில் நிலையத்திக் காத்திருந்த போது, ரயில் நிலையத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நதீம், டானிஸ், முர்ஷீக் ஆகிய 3 பேர் அறிமுகமாகியுள்ளனர்.

அவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாகவும், தங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். அவர்களது ஆசை வார்த்தைகளை நம்பிய அக்குடும்பத்தினர், அவர்களோடு சென்றுள்ளனர். லட்சுமி நகரில் உள்ள தங்களது அறைக்கு அவர்களை அழைத்துச் சென்ற பீகார் மாநில இளைஞர்கள், அங்கு இளம்பெண்ணின் கணவர் மற்றும் குழந்தையை கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் கண் முன்னரே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'இந்தி படித்தவர்களே இங்கு வந்து சித்தாள் வேலை தான் செய்கிறார்கள்...' திமுக எம்.பி,. ஆ.ராசா ஆவேசம்..!

இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் பீகாரை சேர்ந்த நதீம், டானிஷ் மற்றும் முர்சித் ஆகியோரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்... ஓடோடி வந்து விளக்கம் சொன்ன தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம்.!