ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் மதுக்கடை மேலாளரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி எனக் கண்டறிந்த நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அவர் 2010 முதல் நெல்லூர் மத்திய சிறையில் கைதியாக உள்ளார். பிப்ரவரி 12, 2014 அன்று சிறையில் இருந்து தப்பிய ஸ்ரீகாந்த், 2018 நவம்பர் மாதம் மீண்டும் போலீசாரால் பிடிபட்டு, அதன் பின்னர் சிறையில் உள்ளார்.
ஸ்ரீகாந்த் சமீபத்தில் பரோலுக்கு விண்ணப்பித்தார். நெல்லூர் மற்றும் திருப்பதி மாவட்ட எஸ்.பி.க்களும் நெல்லூர் சிறை கண்காணிப்பாளரும் ஸ்ரீகாந்த் வெளியே வந்தால் கடுமையான குற்றங்களைச் செய்யக்கூடும் என்று கூறி அவருக்கு பரோல் வழங்குவதை எதிர்த்தனர். நெல்லூர் மாவட்ட சிறை அதிகாரிகளால் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கி மருத்துவமனைக்கு நடந்து செல்லும்போது, ஒரு இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் அவரது கையை உடைத்தது.
இதனால் ஸ்ரீகாந்த்தை மீண்டும் நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விதிகளின்படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது யாரும் அவரைச் சந்திக்காமல் பார்த்துக் கொள்வது போலீசாரின் பொறுப்பாகும். இந்தநிலையில் ஸ்ரீகாந்த் சிறையில் இருக்கும் போது ரவுடி கும்பலை அவரது காதலி அருணா கவனித்து வந்துள்ளார். மருத்துவமனையில் ஸ்ரீகாந்த் இருந்தபோது அருணாவுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: நியாயமான தேர்தல்னா வெளிப்படைத்தன்மை இருக்கலாமே! முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி..!
நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சில தலைவர்களையும், தலைமை செயலகத்தில் உள்ள சில உயர் அதிகாரிகளையும் வைத்து ஸ்ரீகாந்த்திற்கு பரோல் பெற செய்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் சர்ச்சைக்குரியதாக மாறியதை அடுத்து, அரசு பரோலை ரத்து செய்தது. இருப்பினும் ஸ்ரீகாந்த் பரோலில் இருந்து வெளியே வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் அருணாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மோதல் வேணாம்!! அமைதியாக போங்க!! இந்தியா - பாகிஸ்தானை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா!!