பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தி வருவதாக கூறப்பட்டது. தொடர்ந்து அவர்களை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சி தூய்மை பணியை தனியார்மயம் ஆக்குவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் காலை முதல் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர் லேண்ட் தனியார் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை அடுத்து தூய்மை பணியாளர்களுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் உடன்பாடு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு 12 மணி நேரம் வேலை செய்வதாகவும் தங்களுக்கு ஓய்வே கிடையாது என்றும் கூறியுள்ளனர். சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் கூட மெமோ கொடுத்து விடுவோம் என்று மிரட்டுவதாகவும் தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: உன் வாய்… உன் உருட்டு! அதிமுக மேல தப்புதான் - சசிகலா பரபரப்பு பிரஸ்மீட்
தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்றும் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தமிழக அரசே., தேர்தல் வாக்குறுதி படி, 10 ஆண்டுகள் பணி செய்யும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய பதாகைகளை ஏந்தியவாறு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐந்தாம் தேதிக்குள் தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் எங்களுக்கு தீபாவளிக்கு போனஸ் கொடுப்பதில் என்ன பிரச்சனை எனவும் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: அடேங்கப்பா..! கேஸ் போட்ட தேன்மொழி யாருன்னு தெரியுமா? பகீர் கிளப்பிய அதிமுக!