• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆட்டையப் போட்ட 400 ஏக்கர் சர்ச் நிலம்... கத்தோலிக்க பிஷப்கள் வக்ஃபு திருத்த மசோதாவுக்கு ஆதரவு..!

    இது எங்கள் நாள். மாநிலத்தைச் சேர்ந்த எந்த எம்.பி.க்களும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் மசோதாவை ஆதரிக்கவில்லை.
    Author By Thiraviaraj Wed, 02 Apr 2025 18:17:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    catholic-bishops-are-throwing-their-weight-behind-waqf

    மத்திய அரசால் இன்று மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவுக்கு கேரளாவில் உள்ள கத்தோலிக்க சபை ஆதரவு தெரிவித்துள்ளது. கேரள மாநில எம்.பி.க்களை நாடாளுமன்றத்தில் ஆதரிக்க வலியுறுத்தியுள்ளது.

    கேரளாவில் உள்ள ரோமன், சிரோ-மலபார், சிரோ-மலங்கரா தேவாலயங்களின் கத்தோலிக்க பிஷப்புகளின் சங்கமான கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் மார்ச் 29-ம் தேதி வஃக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதற்கு காரணம் முனம்பம் நிலத் தகராறு. இதனை வஃக்பு திருத்த மசோதா தீர்க்க உதவும் என்று கத்தோகிக்க பிஷப்கள் நம்புகிறார்கள்.

    Catholic bishops

    முனம்பத்தில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகள் அமைந்துள்ள 400 ஏக்கர் பரப்பளவை வக்ஃப் வாரியம் வக்ஃப் சொத்தாக அறிவித்துள்ளதால், கடந்த ஆண்டு முதல் தங்கள் வருவாய் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: அக்காவை இரும்பு ராடால் தாக்கிய தம்பி.. 13 வயது சிறுவன் பரிதாப பலி.. உயிருக்கு போராடும் அக்கா..!

    இந்த மசோதாவிற்கு கவுன்சிலின் ஆதரவு முனம்பம் குடியிருப்பாளர்களின் நலனுக்காக மட்டுமே என்று கத்தோலிக்க பிஷப்புகளின் சங்கமான கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் துணைப் பொதுச் செயலாளர் ஃபாதர் தாமஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர், ''இந்த மசோதா சட்டத்தின் சில பிரிவுகளை நிவர்த்தி செய்யும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவை இறுதியில் முனம்பம் பிரச்சினையைத் தீர்க்க உதவும். இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இந்தியாவின் பல பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த நிலங்களில் வசிக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத்தில் சில பிரிவுகள் மாற்றப்பட வேண்டும்” என்று பிஷப் கூறினார்.

    Catholic bishops

    கொச்சியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள முனம்பத்தில் உள்ள 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வக்ஃப் வாரியத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ளன. 2022 முதல், வருவாய்த் துறைக்கு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி குடியிருப்பாளர்கள் சொத்து வரி செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

    1980 களில் இருந்து மீனவ சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட 400 ஏக்கர் நிலம், முதலில் திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது. 1902- அப்துல் சத்தார் மூசா சேட் என்ற வர்த்தகருக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

    பின்னர், ஒரு வாரிசு அந்த நிலத்தை கோழிக்கோட்டை தளமாகக் கொண்ட ஃபாரூக் கல்லூரிக்கு ஒப்படைத்தார். இது சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்பினரை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரி. இந்த ஒப்படைப்பைத் தொடர்ந்து 1950-ல் ஒரு வக்ஃப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. முனம்பத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் இப்போது லத்தீன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்கள். வக்ஃப் பத்திரம் என்பது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஒரு சொத்தின் நிரந்தர அர்ப்பணிப்பை நிறுவும் ஒரு சட்ட ஆவணமாகும்.

    Catholic bishops

    முனம்பம் குடியிருப்பாளர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் தங்கள் போராட்டத்தைத் தொடங்கி 2022-ல் நீதிமன்றத்தை நாடிய போதிலும், மாநில பாரதிய ஜனதா கட்சி பிரிவு வக்ஃப் வாரியத்தின் நடவடிக்கையை எதிர்த்தது கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரச்சினை வேகமெடுத்தது. கட்சியின் மத்திய தலைமை 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்த ஒரு மாதத்திற்குப் பிறகு இது நடந்தது. பின்னர், இந்த பிரச்சினையை மாநிலத்தின் செல்வாக்கு மிக்க சிரோ-மலபார் தேவாலயம் ஆதரித்தது.

    போராட்டத்தைத் தொடர்ந்து கேரள அரசு, கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராமச்சந்திரன் நாயர் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நவம்பர் 2024-ல் அமைத்தது. ஆனால், அது கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

    Catholic bishops

    “இது நாடு முழுவதிலும் விதிக்கப்பட்ட ஒரு மதச் சட்டம். குடும்பங்கள் நிலத்தை சட்டப்பூர்வமாக வாங்கி பதிவு செய்தனர். அதைக் கையாளும் உரிமையை அவர்களால் அணுக முடியவில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்'' என்று சிரோ மலபார் தேவாலயத்துடன் தொடர்புடைய பாதிரியார் ஆண்டனி வடக்கேக்கரா கூறினார்.

    முதலில் ஆகஸ்ட் 2024-ல் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட வக்ஃப் திருத்த மசோதா, 2024 நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.

    இந்த மசோதா, 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சொத்துக்களை நிர்வகித்தல், ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய முயல்கிறது. அதாவது மத்திய வக்ஃப் கவுன்சில், வக்ஃபு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்ப்பது போன்றவை இதில் அடங்கும். திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாவட்ட ஆட்சியர் சர்வே கமிஷனராக மாறுவார். வக்ஃப் சொத்துக்களை சர்வே செய்யும் அதிகாரத்தைப் பெறுவார். வக்ஃப் சொத்து தொடர்பான விஷயங்களில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பே இறுதியானது என்று கருதும் விதியை நீக்கவும் இது முன்மொழிகிறது.

    “இது எங்கள் நாள். மாநிலத்தைச் சேர்ந்த எந்த எம்.பி.க்களும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் மசோதாவை ஆதரிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு எங்கள் கவலையைப் புரிந்துகொண்டு சட்டத்தில் திருத்தங்களைச் செய்து வருகிறது” என்று புதன்கிழமை 172 நாட்கள் நிறைவடைந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி வரும் முனம்பம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் பென்னி கூறினார்.
     
    இதையும் படிங்க: என்னை எப்படி பதவி நீக்கம் செய்யலாம்..? கொந்தளிக்கும் தாம்பரம் கவுன்சிலர்..!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share