• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சுகர் மாத்திரைக்கு ‘நோ’... விஜய்யை விமர்சித்த மார்க்கண்டேயனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த போலீஸ்...!

    இன்று காலை விளாத்திகுளம் போலீசார், மார்க்கண்டேயனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
    Author By Amaravathi Mon, 20 Jul 2026 09:19:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    3 case registered against DMK MLA

    விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திமுக பொதுக்கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது, தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த நிலையில், இன்று காலை விளாத்திகுளம் போலீசார், மார்க்கண்டேயனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.  அப்போது, காவல்துறை வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல விடாமல், திமுக நிர்வாகிகளும், அவரது உறவினர்களும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் திமுக-காங்கிரஸ் நேரடி மோதல்? ஆகஸ்டில் ‘அணுகுண்டு’ வெடிக்கும் என பிரவீன் சக்கரவர்த்தி பரபரப்பு!

    இதையடுத்து, போலீசார் பாதுகாப்புடன் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று, நேரடியாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தற்போது, அங்கு டி.எஸ்.பி. தலைமையில் மார்க்கண்டேயனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு, அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதனிடையே மார்க்கண்டேயனுக்கு நீரழிவு நோய் இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் அதற்கான மாத்திரையைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதனை மார்க்கண்டேயனுக்கு கொடுக்க மறுத்த போலீசார், அவரது ஆதரவாளர்களையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகள் (பேரிகார்டுகள்) அமைக்கப்பட்டுள்ளன.திமுகவினர் அதிக அளவில் அங்கு திரளக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, கூடுதல் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    ஏற்கனவே, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோதும், அவரிடம் இதே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்தான் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, திமுகவினர் அதிக அளவில் அங்கு திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டதுடன், போராட்டங்களும் நடைபெற்றன. பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதேபோன்ற சூழல் மீண்டும் ஏற்படாத வகையில், தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
     
    இதையும் படிங்க: திமுகவின் நாடாளுமன்ற இருக்கை மாற்றம்..!! பின்னணி என்ன தெரியுமா..??

    மேலும் படிங்க
    ராகுல் காந்தி கைதால் சென்னையில் போராட்டம் வெடித்தது! தங்கபாலு தலைமையில் காங். கட்சியினர் மறியல்!

    ராகுல் காந்தி கைதால் சென்னையில் போராட்டம் வெடித்தது! தங்கபாலு தலைமையில் காங். கட்சியினர் மறியல்!

    இந்தியா
    குளிர்பானத்தில் மயக்க மருந்து... சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!" - குற்றவாளிக்கு சாகும் வரை சிறை!

    குளிர்பானத்தில் மயக்க மருந்து... சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!" - குற்றவாளிக்கு சாகும் வரை சிறை!

    தமிழ்நாடு
    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    தமிழ்நாடு
    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    இந்தியா

    செய்திகள்

    ராகுல் காந்தி கைதால் சென்னையில் போராட்டம் வெடித்தது! தங்கபாலு தலைமையில் காங். கட்சியினர் மறியல்!

    ராகுல் காந்தி கைதால் சென்னையில் போராட்டம் வெடித்தது! தங்கபாலு தலைமையில் காங். கட்சியினர் மறியல்!

    இந்தியா
    குளிர்பானத்தில் மயக்க மருந்து... சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

    குளிர்பானத்தில் மயக்க மருந்து... சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!" - குற்றவாளிக்கு சாகும் வரை சிறை!

    தமிழ்நாடு
    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    தமிழ்நாடு
    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share