இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரிய கூட்டமைப்புகள் கடந்த மார்ச் மாதம் டெல்லியில் கூடி தொழிலாளர்களின் தேசிய பேரவை கூட்டம் கூட்டப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் 9 ஆம் தேதி நாடு தழுவிய அளவில், மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு இன்மை, விலைவாசி உயர்வு, மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், பொதுத்துறையை தனியார் துறையில் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் போராட்டமானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தினை பொறுத்தவரை 13 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளன.
இதையும் படிங்க: 'எங்கேயும் எப்போதும்' பட பாணியில் கோர விபத்து.. மோதிக்கொண்ட பேருந்துகள்.. 40 பேர் பரிதாப பலி..!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். வரும் 9 ஆம் தேதி தமிழகத்திலும் திட்டமிட்டப்படி இந்த வேலைநிறுத்தம் என்பது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தமிழகத்தில் 13 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும், பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது எனவும், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுனர்கள், தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கூட்டாக பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 80 சதவீத தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!