• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மீண்டு(ம்) வந்தார் அல்பானீஸ்.. ஆஸி., தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி.. இழந்த ஆதரவை மீட்டது எப்படி?

    ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை பிரதமர் அல்பானீஸுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைவாகவே இருந்தது. இந்நிலையில் எப்படி அவர் ஆதரவை மீட்டெடுத்து மீண்டும் பிரதமரானார் என்பதை விரிவாக பார்க்கலாம்..
    Author By Pandian Sun, 04 May 2025 10:09:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    australias-left-leaning-labor-party-wins-elections-pm-a

    ஆஸ்திரேலியாவில் மொத்தமுள்ள 150 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. 150 தொகுதிகளில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி களமிறங்கியது. எதிக்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி களமிறங்கியது. பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நேற்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

    Peter Dutton

    இதில் 2022ல் ஆட்சி அமைத்த தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அறுதிப் பெரும்பான்மைக்கு 76 இடங்கள் போதும் என்ற நிலையில், தொழிலாளர் கட்சிக்கு 78 இடங்கள் கிடைத்தன. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.  அவரை எதிர்த்து லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பீட்டர் டட்டனுக்கு (Peter Dutton) 30 இடங்கள் மட்டுமே கிடைத்த நிலையில் அவரது சொந்த தொகுதியிலேயே அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுவரை எந்தவொரு எதிர்க்கட்சி தலைவரும் தாம் போட்டியிட்ட தேர்தலில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அந்த வரலாறு மக்களின் தீர்ப்பால் மாற்றப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

    Peter Dutton
    தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என கூறப்பட்டது. அதன்படியே அவர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை பிரதமர் அல்பானீஸுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைவாகவே இருந்தது. அதற்கு விலைவாசி உயர்வு, பண வீக்கம், வீட்டு வசதி சிக்கல்கள் என பல காரணங்கள் சொல்லப்பட்டது. லிபரல் கட்சி வேட்பாளர் பீட்டர் டட்டன் அந்தச் சூழலை தனதாக்கிக்கொண்டு வெற்றி பெற பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார். ஆனால் அவர் அறிவித்த திட்டங்களில் சில, அமெரிக்க தேர்தலில் டிரம்ப் அறிவித்த வாக்குறுதிகள் போலவே இருந்தன.

    Peter Dutton

    அமெரிக்காவில் இப்போதைய சூழலை ஒப்பிட்டுப் பார்த்த ஆஸ்திரேலிய வாக்காளர்கள்,  அந்தோணி அல்பானீஸே தேவலாம் என்ற நிலைக்கு வந்து, அவரையே மீண்டும் வெற்றி பெறச் செய்துள்ளனர். பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல், சிறந்த சுகாதார பராமரிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டுவருதல் போன்றவற்றில் அவருடைய வலுவான பிரசாரம் வெற்றிக்கு வழி வகுத்தது. அத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி போருக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை அந்தோணி அல்பானீஸ் பிரசாரத்தில் முன்னெடுத்துச் சென்றார்.  

    Peter Dutton

    அது அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையும் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் என்ற சிறப்பை அந்தோணி அல்பானீஸ் பெற்றுள்ளார்.  இந்த தருணம் தனது வாழ்வில் சிறப்பானது என அவர் கூறி உள்ளார். ஆஸ்திரேலியாவின் மதிப்புகளுக்காகவும், எதிர்காலத்துக்காகவும், உலகளாவிய சவால்களை ஆஸ்திரேலியாவுக்கே உரிய பாணியில் எதிர்கொள்ளவும் இன்று, ஆஸ்திரேலிய மக்கள் தங்கள் கட்சிக்கு வாக்கு செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

    இதனிடையே, ஆஸ்திரேலிய பிரதமராகும் ஆன்டனி ஆல்பனீஸிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தேர்வானதற்கும், இந்த பெரும் வெற்றிக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‘இதன்மூலம், ஆஸ்திரேலிய மக்கள் உங்கள் தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, செழிப்புக்கான நமது தொலைநோக்குப் பார்வையை முன்னோக்கி நகர்த்தவும் நாம் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
     

    இதையும் படிங்க: எல்லையில் தெறித்து ஓடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. இந்திய ராணுவம் குவிப்பால் பீதியில் தீவிரவாதிகள்!

    மேலும் படிங்க
    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்
    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த

    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த 'ஜிங்குனமணி' மாடல்.. விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன..!

    சினிமா
    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    The Tiger is back on the hunt..!! இன்று மாலை

    The Tiger is back on the hunt..!! இன்று மாலை 'ஜெயிலர் 2'வின் மாஸ் அப்டேட் ரிலீஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்

    செய்திகள்

    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்
    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    தமிழ்நாடு
    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share