விபத்து காப்பீடு என்பது விபத்து காரணமாக ஏற்படும் காயங்கள், மரணம் அல்லது உடல் உறுப்புகளின் இழப்பு போன்றவற்றுக்கு நிதி பாதுகாப்பு வழங்கும் ஒரு காப்பீட்டு திட்டமாகும். கை, கால்கள் இழப்பு போன்ற நிரந்தர முழு இயலாமை அல்லது நிரந்தர பகுதி இயலாமை ஏற்பட்டால், இந்த காப்பீடு இழப்பீடு வழங்குகிறது.
எதிர்பாராமல் சாப்பிட்டால் தனது கை கால்களை இழக்கும் பட்சத்தில் இன்சூரன்ஸ் பணம் வழங்கப்படுவது இயல்பு. ஆனால் பிரிட்டனில் ஒரு மருத்துவர் தனது காப்பீட்டு தொகையை பெறுவதற்காக இரண்டு கால்களையும் அகற்றிக் கொண்ட நிகழ்வு அரங்கில் உள்ளது. வேண்டுமென்றே தன்னது கால்களை அந்த மருத்துவர் அகற்றிக் கொண்டதாக இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள நீல் ஹாப்பர் என்ற 49 வயதான மருத்துவர் ஒருவர் தனக்கு காப்பீடு செய்துள்ளதாக தெரிகிறது. காப்பீட்டு பணம் 5.4 கோடி வரும் என்ற நம்பிக்கையில் தனது இரண்டு முழங்கால்களையும் அகற்றிக் கொண்டுள்ளார். நீல் ஹாப்பர் வேண்டுமென்றே பணத்தை பெறுவதற்காக தனது கால்களை அகற்றிக் கொண்டதாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகி உள்ளனர். இந்த வழக்க தற்போது விசாரணையில் உள்ளது
இதையும் படிங்க: அலட்சியத்தால் நடந்த கோர விபத்து.. கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
உடலுக்கு எந்த விதமான தீங்கும் விளைவிக்காமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த சில பிரீமியம் வீடியோக்களை ஒரு வலைதளத்தில் இருந்து நீல் ஹாப்பர் வாங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மற்றொரு மருத்துவரின் உதவியோடு நீல் தனது இரண்டு கால்களையும் அகற்றியதாக கூறப்படுகிறது.
தனக்கு ரத்த நாள பிரச்சனை இருந்ததால் முழங்கால்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், அப்படி அகற்றப்படாவிட்டால் உடல் முழுவதும் பரவும் என்று தங்களை நம்ப வைக்க முயன்றதாகவும் காப்பீட்டு நிறுவனங்கள் புகாரில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஷூரன்ஸ் பணத்தாசையில் தனது இரண்டு கால்களையும் மருத்துவர் ஒருவர் அகற்றிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியா, சீனாவைப் பார்த்து வயிறு எரியும் டிரம்ப்... அமெரிக்க ஐ.டி. நிறுவனங்களுக்கு நேரடி எச்சரிக்கை...!