தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியை சேர்ந்த 37 வயது அறிவழகன், இவரது மனைவி 35 வயது உஷா. இவர்களுக்கு 10 வயதில் ரூபா, 9 வயதில் பாவ்யாஸ்ரீ என இரண்டு மகள்கள் உள்ளனர்.
அறிவழகன் பனங்காடு பகுதியில் உள்ள கோயிலுக்கு தனது மனைவி, மகள்கள் மற்றும் தங்கை மகள் 4 வயது தேஜாஸ்ரீ ஆகியோருடன் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலம் அருகில் சென்ற போது கேரளாவில் இருந்து நாகூர் தர்காவிற்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று அறிவழகன் பைக் மீது வேகமாக மோதியது. இதில் பைக்கில் இருந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அறிவழகன் மற்றும் அவரது மகள் பாவ்யா ஸ்ரீ, தங்கை மகள் தேஜா ஸ்ரீ ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதையும் படிங்க: அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்... அப்பளம் போல் நொறுங்கிய வேன் - 7 குழந்தைகள் உட்பட 11 பேர் துடிதுடித்து பலி...!
இந்த விபத்தில் அறிவழகன் மனைவி உஷா, மகள் ரூபா ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வல்லம் டிஎஸ்பி கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த உஷா மற்றும் சிறுமி ரூபா ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தலைக்குப்புற கவிழ்ந்த ஈச்சர் வேன்; இபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுச் சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்...!