பாமகவில் அப்பா - மகன் சண்டை சம்மந்தி சண்டையா மாற துவங்கி இருக்கு. ஆனா அப்பா மகன் கருத்து வேறுபாட்டோட பிதாமகன் முகுந்தன் இப்ப கட்சியிலயே இல்லையாம். பிரிஞ்சு கிடக்கிற பாமகவில் உறவு பகை உச்சத்தை தொட்டுருக்கு. ராமதாஸ் நடத்தின பூம்புகார் மாநாட்டில் அவரோட மூத்த மகளான காந்திமதி மேடையேறி தீர்மானம் எல்லாம் வாசிச்சிருக்காங்க. இவங்க மகன் தான் அன்புமணியோட மாப்பிள்ளை.
குடும்பத்திலிருந்து யாரும் கட்சிக்கு வரமாட்டாங்கன்னு சொன்ன ராமதாஸ் குடும்பத்துல மகன், மகள், பேரன்னு கட்சி விவகாரங்களுக்குள்ள நேரடியா வந்திருக்கிறது ஒரு பக்கம்னா, ராமதாஸ் அன்புமணிக்கு நடுவுல கருத்து வேறுபாடு வர காரணமா இருந்தவரு முகுந்தன்.
இவரு காந்திமதியோட மகன். இவரை இளைஞரணி செயலாளரா ராமதாஸ் நியமிச்சப்பதான் மேடையிலேயே அப்பா மகன் சண்டை வெட்ட வெளிச்சமானது. அந்த நாளிலிருந்து அன்புமணி தான் வசிக்கும் சென்னை பனையூரில் ஒரு ஆபீஸ் போட்டுருக்காரு. அடுத்தடுத்த நாளில் இருந்து பனையூருக்கும் தைலாபுரத்துக்கும் அரசியல் போர் துவங்குச்சு.
இதையும் படிங்க: “ஒண்ணே ஒண்ணுக்கும் ஆப்பு” அன்புமணியின் அடிமடியில் கைவைத்த ராமதாஸ்... டெல்லிக்கு பறந்த புகார் கடிதம்...!
ஆனா எல்லா பிரச்சனைக்கும் பிதாமகனா இருந்த முகந்தன் இப்ப பாமகவிலேயே இல்லைங்கிறாங்க. எனக்கு மாமாவும் வேணும், தாத்தாவும் வேணும். அவங்க ஒன்னு சேர்ந்தாதான் கட்சிக்குள்ள வருவேன்னு அவரு அன்புமணி பொதுக்குழுவுக்கும் போகல. ராமதாஸ் ஓட பூம்புகார் மாநாட்டுக்கும் போகல.
ஆனா மகன் இல்லைன்னாலும் அம்மா காந்திமதி மேடையேறி தீர்மானம் வாசிச்சது சர்ச்சையைத் தான் கிளப்பியிருக்கு. காரணம் செளமியா அன்புமணிக்கு போட்டியாக காந்திமதிக்கு பதவி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அன்புமணி தரப்பை மேலும் கடுப்பாக்கியுள்ளது. இதனால் பாமகவில் அன்புமணி - ராமதாஸ் இடையிலான விரிசல் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாமக நிறுவனர் ராமதாஸை உலுக்கிய சோகம்... பெரும் அதிர்ச்சியுடன் தமிழக அரசுக்கு கோரிக்கை...!